close
Choose your channels

இரண்டரை மணி நேர மேக்கப்.. இதுவரை இல்லாத போர்க்காட்சிகள்: 'கங்குவா' படத்தின் அரிய தகவல்கள்..!

Sunday, September 10, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்தப் படத்தின் முக்கிய தகவல்கள் சில வெளியாகி உள்ளன.

இந்த படத்தில் சூர்யா சரித்திர கால கதையம்சம் கொண்ட காட்சிகளுக்கு மட்டும் தினமும் இரண்டரை மணி நேரம் மேக்கப்புக்காக மட்டும் பொறுமையாக செலவழித்து உள்ளார் என்று கூறப்படுகிறது. சூர்யா எப்போதும் ஒரு கேரக்டரை எடுத்து கொண்டால், அந்த கேரக்டருக்காக மிகப்பெரிய அளவில் மெனக்கெடுவார். இந்த படத்தில் கூடுதல் சிரத்தை எடுத்து மேக்கப்பில் கவனம் செலுத்தி உள்ளார்

மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்னொரு பக்கம் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் பணிகளும் நடைபெற்று வருவதாகவும் குறிப்பாக படம் முழுவதையும் 3டி தொழில்நுட்பத்தில் மாற்றும் பணிகள் மற்றும் 10 மொழிகளுக்கான டப்பிங் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

கோலிவுட் திரை உலகில் இதுவரை இல்லாத அளவில் ஒரு படம் திரையிடப்படும் முன்பே மிகப்பெரிய தொகைக்கு வியாபாரமான படங்களில் ஒன்று ‘கங்குவா’ என்று கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தை அடுத்த ஆண்டு தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இதுவரை உருவான சூர்யா படங்களில் இந்த படம் தான் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் என்றும் குறிப்பாக இந்த படத்தின் போர்க்காட்சிகள் இதுவரை எந்த படத்தில் இடம் பெறாத வகையில் உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் அந்த காட்சிகளை பார்க்கும்போது ரசிகர்களுக்கு புதிய அனுபவம் ஏற்படும் என்று கூறப்படுகிறது

பெரும்பாலான போர்க்காட்சிகள் கொடைக்கானலில் உள்ள அடர்ந்த காடுகளில் படமாக்கப்பட்டு உள்ளதாகவும் ஒரு சில போர்க்காட்சிகள் ஆந்திராவில் படமாக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment