வாடிவாசல் நாயகனே, வாருங்கள் அரசியலுக்கு: சூர்யா ரசிகர்களின் பரபரப்பு போஸ்டர்!

  • IndiaGlitz, [Saturday,September 19 2020]

’வாடிவாசல் நாயகனே வாருங்கள் அரசியலுக்கு’ என சூர்யாவின் ரசிகர்கள் மதுரையில் போஸ்டர் ஒட்டி இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கடந்த சில மாதங்களாகவே மாஸ் நடிகர்களின் ரசிகர்கள் பரபரப்பான போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர் என்பது தெரிந்ததே. குறிப்பாக விஜய் ரசிகர்கள் விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என்றும் விஜய்யை எம்ஜிஆர் போல் உருவகப்படுத்தியும் பரபரப்பான போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். அதேபோல் ரஜினி குறித்தும் அவரது ரசிகர்கள் ஒட்டி வரும் போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நீட் தேர்வு குறித்து சூர்யா வெளியிட்ட அறிக்கையால் தமிழகமே பரபரப்பில் இருக்கும் நிலையில் சூர்யாவின் ரசிகர்கள் தற்போது போஸ்டர் போரில் இறங்கி உள்ளனர்.

வாடிவாசல் நாயகனே அரசியல் களத்திற்கு வாருங்கள்
அநீதிக்கு எதிராக குரல் இனி அரசியலில் ஒலிக்கட்டும்
அறம் சார்ந்த அரசியலை முன்னெடுப்போம் வாருங்கள்

என மதுரையில் உள்ள சூர்யாவின் ரசிகர்கள் போஸ்டரை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். அதுமட்டுமின்றி சூர்யாவின் கட்சிக்கு ’இளம் காளைகள் கட்சி’ என்ற பெயரையும் அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 

More News

இந்திய நீதித்துறை குறித்து மீண்டும் டுவிட் போட்ட சூர்யா!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் நீட் தேர்வு குறித்து காரசாரமான ஒரு அறிக்கையை வெளியிட்டார். இந்த அறிக்கையில் நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுவது

டுவிட்டரில் விஜய்யின் செல்பி செய்த மகத்தான சாதனை!

'மாஸ்டர்' படத்தின் படப்பிடிப்பின்போது ரசிகர்களுடன் விஜய் எடுத்த செல்பி புகைப்படம் டுவிட்டரில் மிகப்பெரிய சாதனை செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

இதுதான் எங்க தலைவர், குருவே சரணம்: ரஜினி குறித்து ராகவா லாரன்ஸ்

மும்பையைச் சேர்ந்த ரசிகர் ஒருவர் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் இனி பிழைக்க மாட்டோம் என்று நினைத்து அவர் ரஜினிக்கு பதிவு செய்த டுவிட்டில்

சீனாவில் பரவும் புதிய பாக்டீரியா நோய்!!! கொரோனா மாதிரி இதுவும் ஆபத்தானதா?

கடந்த சில தினங்களாக சீனாவில் ப்ரூசெல்லோசிஸ் எனப்படும் புதிய பாக்டீரியா நோய் மனிதர்களுக்குப்

தனது ஸ்கூட்டரை நடமாடும் வகுப்பறையாக மாற்றிய ஆசிரியர்… குவியும் பாராட்டுகள்!!!

கொரோனா தாக்கத்தால் மாணவர்களின் கல்வி முறையே முற்றிலும் மாறியிருக்கிறது