'தளபதி 67' படத்தில் ரோலக்ஸ்? ஹிண்ட் கொடுத்த சூர்யா!

லோகேஷ் கனகராஜ் இயக்கிய ’விக்ரம்’ திரைப்படத்தில் ரோலக்ஸ் என்ற கேரக்டரில் ஐந்தே நிமிடங்கள் வந்தாலும் சூர்யா அந்த கேரக்டரில் கலக்கி விட்டார் என்றும் அது மட்டுமின்றி லோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்தடுத்த படங்களிலும் இந்த ரோலக்ஸ் கேரக்டர் இடம்பெற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.

லோகேஷ் சினி யுனிவர்ஸ் என்ற அடிப்படையில் லோகேஷ் கனகராஜ் இயக்கயிருக்கும் ’தளபதி 67’ ’விக்ரம் 3’ மற்றும் ‘கைதி 2’ ஆகிய படங்களில் ரோலக்ஸ் கேரக்டர் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ’தளபதி 67’ படத்தில் நடிப்பது குறித்து த்ரிஷா சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறிய போது இது குறித்து அடுத்த வருடம் பேசலாம் என்றும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் வரை பொறுமை காப்போம் என்றும் தெரிவித்திருந்தார். இந்த பேட்டியின் வீடியோவை சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் இருந்து லைக் செய்துள்ளதை ரசிகர்கள் கவனித்துவிட்டனர். இதை வைத்து ‘தளபதி 67’ படத்தில் சூர்யாவின் ரோலக்ஸ் கேரக்டர் இடம்பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இது மட்டும் உண்மையாக இருந்தால் ’பிரண்ட்ஸ்’ படத்திற்கு பிறகு 21 ஆண்டுகள் கழித்து மீண்டும் விஜய் - சூர்யா இணைந்து நடிக்க வாய்ப்புள்ளது. இப்படி ஒரு அதிசயம் நடக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 

More News

திடீரென திருப்பதி செல்லும் கமல்ஹாசன்.. காரணம் இதுதான்!

 உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக மீண்டும் நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்

'துணிவு' டிரைலர் ரன்னிங் டைம் இவ்வளவா? அஜித் ரசிகர்களுக்கு செம விருந்து

 அஜித் நடித்த 'துணிவு' திரைப்படத்தின் டிரைலர் இன்று இரவு ஏழு மணிக்கு வெளியாக இருக்கும் நிலையில் இந்த ட்ரெய்லரில் ரன்னிங் டைம் குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது. 

'வாரிசு' டிரைலர் புத்தாண்டில் இல்லையா? விஜய் ரசிகர்கள் அதிருப்தி!

அஜித் நடித்த 'துணிவு' திரைப்படத்தின் டிரைலர் இன்று இரவு 7 மணிக்கு வெளியாக இருக்கும் நிலையில் இன்று நள்ளிரவு 12 மணிக்கு அல்லது நாளை புத்தாண்டு தினத்தில் விஜய் நடித்த 'வாரிசு' படத்தின் டிரைலர்

சிம்புவின் 'பத்து தல' ரிலீஸ் தேதி: அதிகாரபூர்வ அறிவிப்பு!

 சிம்பு மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடித்த 'பத்து தல' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த ஆண்டின் கடைசி வொர்க் -அவுட்: ஐஸ்வர்யா ரஜினியின் வேற லெவல் வீடியோ!

2022ஆம் ஆண்டு இன்றுடன் விடைபெறும் நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இந்த ஆண்டின் கடைசி வொர்க் - அவுட் என பதிவு செய்துள்ள வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.