close
Choose your channels

'தளபதி 67' படத்தில் ரோலக்ஸ்? ஹிண்ட் கொடுத்த சூர்யா!

Saturday, December 31, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லோகேஷ் கனகராஜ் இயக்கிய ’விக்ரம்’ திரைப்படத்தில் ரோலக்ஸ் என்ற கேரக்டரில் ஐந்தே நிமிடங்கள் வந்தாலும் சூர்யா அந்த கேரக்டரில் கலக்கி விட்டார் என்றும் அது மட்டுமின்றி லோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்தடுத்த படங்களிலும் இந்த ரோலக்ஸ் கேரக்டர் இடம்பெற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.

லோகேஷ் சினி யுனிவர்ஸ் என்ற அடிப்படையில் லோகேஷ் கனகராஜ் இயக்கயிருக்கும் ’தளபதி 67’ ’விக்ரம் 3’ மற்றும் ‘கைதி 2’ ஆகிய படங்களில் ரோலக்ஸ் கேரக்டர் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ’தளபதி 67’ படத்தில் நடிப்பது குறித்து த்ரிஷா சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறிய போது இது குறித்து அடுத்த வருடம் பேசலாம் என்றும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் வரை பொறுமை காப்போம் என்றும் தெரிவித்திருந்தார். இந்த பேட்டியின் வீடியோவை சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் இருந்து லைக் செய்துள்ளதை ரசிகர்கள் கவனித்துவிட்டனர். இதை வைத்து ‘தளபதி 67’ படத்தில் சூர்யாவின் ரோலக்ஸ் கேரக்டர் இடம்பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இது மட்டும் உண்மையாக இருந்தால் ’பிரண்ட்ஸ்’ படத்திற்கு பிறகு 21 ஆண்டுகள் கழித்து மீண்டும் விஜய் - சூர்யா இணைந்து நடிக்க வாய்ப்புள்ளது. இப்படி ஒரு அதிசயம் நடக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment
Related Videos