close
Choose your channels

வேட்டியை கட்டினா நான்தாண்டா ஜட்ஜ்: சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' டிரைலர்

Wednesday, March 2, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் வரும் மார்ச் மாதம் 11ஆம் தேதி ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகியுள்ளது

சூர்யாவின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள், சூர்யா - பிரியங்காமோகனின் ரொமான்ஸ் காட்சிகள், சூரி-புகழ் காமெடி காட்சிகள் என அனைத்து அம்சங்களும் இந்த படத்தில் நிறைந்திருப்பது இந்த டிரைலரில் இருந்து தெரியவருகிறது

பெண்கள் என்றால் வீக்கர் செக்ஸ் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு பெண்கள் என்றால் பலமானவர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும் போன்ற அர்த்தமுள்ள வசனங்கள் இந்த படத்தின் பிளஸ் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

டி இமானின் இசையில் அருமையான பாடல்கள் மற்றும் அதிரடியான பின்னணி இசை, ரத்னவேலுவின் அபாரமான கேமரா கோணங்கள் ஆகியவை இந்த படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் என்று தெரிகிறது. வினய், சுப்பு பஞ்சு உள்பட ஒரு சில வில்லன்கள், சத்யராஜ் சரண்யா பொன்வண்ணன் உள்பட ஒருசில குணசித்திர கேரக்டர்கள், சூரி, தேவதர்ஷினி, புகழ் ஆகிய காமெடி நடிகர்கள் என மொத்தத்தில் ஒரு சூப்பர் ஹிட் கமர்ஷியல் படமாக ’எதற்கும் துணிந்தவன்’ அமைந்து உள்ளது என்பது இந்த ட்ரெய்லரில் இருந்து தெரியவருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment