சூர்யாவின் 'காப்பான்' ரிலீஸ் குறித்த தகவல்

  • IndiaGlitz, [Monday,February 11 2019]

சூர்யா நடித்து வரும் 'என்.ஜி.கே. திரைப்படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் ஒருபுறம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் அவர் நடித்து வரும் படமான 'காப்பான்' திரைப்படத்தின் படப்பிடிப்பும் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

இந்த நிலையில் பிரதமரின் காப்பாளர் மற்றும் தேசிய பற்று மிகுந்த சூர்யாவின் கேரக்டர் அமைந்துள்ள இந்த படம் படத்தின் கதைக்கு ஏற்றாற்போல் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திரதினத்தன்று வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். ஒருவேளை இந்த தேதிக்குள் பணிகள் முடிவடையவில்லை என்றால் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கடந்த 2009ஆம் ஆண்டு சூர்யா முக்கிய வேடத்தில் நடித்த 'ஆதவன்' மற்றும் 'அயன்' ஆகிய இரண்டு படங்கள் வெளியானதை அடுத்து 2019ஆம் ஆண்டுதான் சூர்யாவின் இரண்டு படங்கள் ஒரே ஆண்டில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா, சாயிஷா, மோகன்லா, ஆர்யா, பொமன் இரானி, சமுத்திரக்கனி, பிரேம், உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை கே.வி.ஆனந்த் இயக்கி வருகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகி வரும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.
 

More News

'பொதுநலன் கருதி' இயக்குனரின் குற்றச்சாட்டுக்கு கருணாகரன் விளக்கம்

சமீபத்தில் வெளியான 'பொதுநலன் கருதி' திரைப்படத்தின் இயக்குனர் சீயோன், இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த கருணாகரன், தனக்கும் தயாரிப்பாளருக்கும் கொலைமிரட்டல் விடுத்ததாக

தேர்தலில் போட்டியிட விரும்பும் மறைந்த சூப்பர் ஸ்டாரின் மனைவி

கன்னட சூப்பர் ஸ்டார் அம்பரீஷ் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு மரணம் அடைந்தார். நடிகராக மட்டுமின்றி அரசியலிலும் ஜொலித்த அம்பரீஷ் கர்நாடக மாநிலத்தில்

'அருவி' நாயகி அதிதிபாலன் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி!

கடந்த 2017ஆம் ஆண்டு வெளிவந்த மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்று 'அருவி'. மிகக்குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்த படம் மிகப்பெரிய வசூலை பெற்று வெற்றி அடைய

முதல்முறையாக அதர்வாவுடன் இணையும் பிரபல நடிகர்

அதர்வா நடிப்பில் இயக்குனர் கண்ணன் இயக்கிய 'பூமராங்' திரைப்படம் வரும் மார்ச் 1ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் அதர்வா ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் சூர்யா-கார்த்தி திரைப்படங்கள்!

கார்த்தி நடித்த 'தேவ்' திரைப்படம் வரும் 14ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது. மேலும் இன்று முதல் ஒருசில திரையரங்குகளில் முன்பதிவு தொடங்கிவிட்டது.