close
Choose your channels

சூர்யாவின் 'கங்குவா' கிளிம்ப்ஸ் வீடியோ இத்தனை மொழிகளிலா? அதிகாரபூர்வ அறிவிப்பு..!

Saturday, July 22, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நாளை சூர்யாவின் பிறந்தநாள் கொண்டாட இருப்பதை அடுத்து அவர் நடித்து வரும் ‘கங்குவா’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த கிளிம்ப்ஸ் வீடியோ ஆறு மொழிகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை அதிகாலை 12.01 மணிக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் என ஆறு மொழிகளில் ‘கங்குவா’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு சூர்யா ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

மேலும் ‘கங்குவா’ படத்தை வரும் ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு விடுமுறையின் போது வெளியிடப்பட குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் சூர்யாவின் படங்களில் மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

சூர்யா, திஷா பதானி, நட்டி நடராஜ் உள்ளிட்ட பல நடித்துள்ள இந்த படம் தேவிஸ்ரீ பிரசாத் இசையில், சிறுத்தை சிவா இயக்கத்தில், ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகி வருகிறது. மேலும் இந்த படம் 3டி டெக்னாலஜியில் உருவாக்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.