இறுதிக்கட்டத்தில் சூர்யாவின் 'கங்குவா' படப்பிடிப்பு.. ரிலீஸ் எப்போது?

  • IndiaGlitz, [Wednesday,October 04 2023]

சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

நேற்று ‘கங்குவா’ படக்குழுவினர் தாய்லாந்து நாட்டிற்கு கிளம்பிய நிலையில் இன்று அதிகாலை தாய்லாந்து சென்றடைந்ததாகவும், நாளை முதல் அங்கு படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

தாய்லாந்து நாட்டில் உள்ள கடற்கரை மற்றும் அடர்ந்த காடுகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. தாய்லாந்தில் 25 நாட்களுக்கு படப்பிடிப்பு நடைபெறும் என்றும் இத்துடன் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விடும் என்றும் கூறப்படுகிறது.

இந்த படத்தை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்யப்படக் குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் அதற்குள் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளை முடிக்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

சூர்யா ஜோடியாக திஷா பதானி நடிக்கும் இந்த படத்தில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்தராஜ், ஜெகபதி பாபு, நடராஜன் சுப்பிரமணியம், பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ரூ.350 கோடி பட்ஜெட்டில், 10 மொழிகளில் இந்த படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

More News

'திருச்சிற்றம்பலம்' ஷோபனாவை விட சூப்பரா இருக்கும்: அடுத்த பட கேரக்டர் குறித்து நித்யா மேனன்..!

நடிகை நித்யா மேனன் தனது அடுத்த படத்தின் கேரக்டர் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறிய போது 'திருச்சிற்றம்பலம்' ஷோபனாவை விட இந்த கேரக்டர்  சூப்பராக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

'தலைவர் 170' படத்தின் ரஜினி கெட்டப்.. செம்ம ஸ்மார்ட்டா இருக்காரே..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் 'தலைவர் 170' படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்க இருக்கும் நிலையில் சற்றுமுன் லைக்கா நிறுவனம் ரஜினியின் கெட்டப் குறித்த

இந்த வாட்டி ரொம்ப பர்சனலா நிறைய பேரோட வாழ்க்கையை இழுக்குறாங்க.. பிக்பாஸ் விசித்ரா புலம்பல்..!

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய இன்று  மூன்றாவது நாளாக நடைபெற்று வரும் நிலையில் சற்று முன் வெளியான புரமோவில், காரசாரமாக  விஷ்ணு மற்றும் மாயா வாதாடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இரட்டை குழந்தைகளுடன் விபத்தில் சிக்கிய சின்மயி.. குடிகார டிரைவரால் ஏற்பட்ட விபரீதம்..!

 பாடகி சின்மயி தனது காரில் சென்று கொண்டிருக்கும் போது எதிரே வந்த ஆட்டோ டிரைவர்  மோதி விட்டதாகவும் அந்த டிரைவர் குடி போதையில் இருந்ததாகவும் தனது சமூக வலை தளத்தில் பதிவு செய்துள்ளார்.  

பிக்பாஸ் நடிகருக்கு பிறந்த 2வது குழந்தை.. க்யூட் புகைப்படம் வைரல்..!

தமிழ் திரை உலகின் நடிகரும், பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளருக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ள நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.