சூர்யா அடுத்த படத்தின் டீசர் ரிலீஸ்: இணையதளங்களில் வைரல்!

  • IndiaGlitz, [Friday,April 08 2022]

சூர்யா நடிப்பில் பாலா இயக்கத்தில் உருவாகி வரும் ’சூர்யா 41’ படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அவரது தயாரிப்பில் உருவான ’ஓ மை டாக்’ என்ற படம் ஏப்ரல் 21ஆம் தேதி அமேசான் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் சற்று முன்னர் சூர்யா இந்த படத்தின் டீசர் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த டீசரில் அருண்விஜய் மகன் அர்னவ் செல்லமாக வளர்க்கும் நாயுடன் இருக்கும் காட்சிகள் உள்ளன. ஒவ்வொரு காட்சியும் கவிதைபோல் ரசிக்கும் வகையில் உள்ள இந்த டீசர் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

அர்னவ் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள இந்த படத்தில் விஜயகுமார் மற்றும் அருண்விஜய் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர் என்பதும், ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று தலைமுறையினர் இந்த படத்தில் நடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சரத் சண்முகம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது என்பது இந்த படமும் சூர்யாவின் முந்தைய படங்களான சூரரைப்போற்று மற்றும் ஜெய் பீம் படங்கள் போலவே ஓடிடியில் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

'மணி ஹெய்ஸ்ட்', 'கூர்கா' படங்களின் காப்பியா  'பீஸ்ட்'? நெல்சன் விளக்கம்

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்' திரைப்படத்தின்  டிரெய்லர் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த ட்ரைலரை வைத்து, 'மால் ஒன்றை தீவிரவாதிகள் தங்களுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வந்து,

'பீஸ்ட்' தாக்கம் எதிரொலி: 'கே.ஜி.எப் 2' படத்திற்கு இவ்வளவு தியேட்டர்கள் தானா?

தளபதி விஜய் நடித்துள்ள 'பீஸ்ட்' மற்றும் யாஷ் நடித்துள்ள 'கே.ஜி.எப் 2' ஆகிய இரண்டு படங்களும் அடுத்தடுத்த நாட்களில் ஐந்து மொழிகளில் பான் - இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ளது.

'பீஸ்ட்' படத்திற்காக முதல்வருடன் விஜய் இருக்கும் கட்-அவுட்: என்ன குறியீடு?

தளபதி விஜய் நடித்துள்ள 'பீஸ்ட்'  திரைப்படம் வரும் 13ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்திற்காக பேனர்கள் வைப்பதில் விஜய் ரசிகர்கள் தீவிரமாக இருக்கும்

'தளபதி 66' படத்தில் இருந்து திடீரென விலகிய இயக்குனர்: என்ன காரணம்?

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 'தளபதி 66' திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது என்பதும் ஒரு சில காட்சிகளும் படமாக்கப்பட்டது என்பது தெரிந்ததே.

என் படம் டிராப் ஆனதுக்கு மோடி தான் காரணம்: நடிகர் ஆரி

 தன்னுடைய படம் தொடங்கப்படாமல் டிராப் ஆனதற்கு பிரதமர் மோடி தான் காரணம் என நடிகர் ஆரி, திரைப்பட விழா ஒன்றில் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது