close
Choose your channels

'பீஸ்ட்' படத்திற்காக முதல்வருடன் விஜய் இருக்கும் கட்-அவுட்: என்ன குறியீடு?

Friday, April 8, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்துள்ள ’பீஸ்ட்’ திரைப்படம் வரும் 13ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்திற்காக பேனர்கள் வைப்பதில் விஜய் ரசிகர்கள் தீவிரமாக இருக்கும் நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுச்சேரியிலும் விஜய் ரசிகர்கள் பேனர்கள் வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் புதுச்சேரியில் ’பீஸ்ட்’ படத்திற்காக வைக்கபப்ட்ட பேனரில் விஜய் மற்றும் புதுவை முதல்வர் ரங்கசாமி ஆகிய இருவரும் இணைந்த பேனர்கள் வைத்திருப்பது புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி விஜய்யின் பனையூர் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்ததாகவும் அப்போது விஜய் மக்கள் இயக்க தலைவர் புஸ்சிஆனந்த் உடன் இருந்ததாகவும் கூறப்பட்டது. மேலும் அவ்வப்போது புஸ்சி ஆனந்த் புதுவை முதல்வரை சந்தித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது திடீரென ’பீஸ்ட்’ படத்திற்காக வைக்கப்பட்ட பேனரில் விஜய்யுடன் புதுவை முதல்வர் ரங்கசாமி இருப்பதில் ஒரு அரசியல் குறியீடு இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அது என்ன அரசியல் குறியீடாக இருக்கும்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.