'தானா சேர்ந்த கூட்டம் முக்கிய பணி முடிந்தது! ஆடியோ ரிலீஸ் எப்போது?

  • IndiaGlitz, [Wednesday,December 20 2017]

சூர்யா, கீர்த்திசுரேஷ் நடிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது இரவுபகலாக போஸ்ட் புரடொக்சன்ஸ் பணி நடைபெற்று வருகிறது.

இந்த படம் வரும் பொங்கல் தினத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதால் டப்பிங் உள்பட அனைத்து பணிகளும் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்றுடன் இந்த படத்தின் டப்பிங் பணி முற்றிலும் முடிந்துவிட்டதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். நேற்றைய கடைசி தினத்தில் நவரச நாயகன் கார்த்திக் தனது பகுதிக்கான டப்பிங்கை முடித்து வைத்தார்.

மேலும் இந்த படத்தின் பாடல்கள் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளதாகவும், அன்றைய தினமே இந்த படத்தின் டிரைலரும் ரிலீஸ் ஆகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

சூர்யா, சூர்யா, கீர்த்திசுரேஷ், செந்தில், சரண்யா பொன்வண்ணன், ரம்யா கிருஷ்ணன், கோவை சரளா, கே.எஸ்.ரவிகுமார், ஆனந்த்ராஜ், ஆர்ஜே பாலாஜி, சுரேஷ்மேனன், தம்பி ராமையா மற்றும் ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தை ஸ்டூடியோ க்ரீன் என்டெர்டைன்மெண்ட்  நிறுவனம் தயாரித்துள்ளது. இளம் இசைப்புயல் அனிருத் இசையமைத்துள்ள இந்த படம் 2018ஆம் ஆண்டின் முதல் வெற்றிப்படமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

More News

பொதுமக்களின் பாதுகாப்பு தான் எனக்கு முக்கியம்: சன்னிலியோன்

பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோன் வரும் 2018ஆம் ஆண்டு ஜனவரி 1, புத்தாண்டு தினத்தில் பெங்களூரில் உள்ள ஸ்டார் ஓட்டல் ஒன்றில் நடனமாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

மம்முட்டி-நயன்தாராவுக்கு கிடைத்தது அரவிந்தசாமி-அமலாபாலுக்கு கிடைக்காதது ஏன்?

அரவிந்தசாமி, அமலாபால் நடிப்பில் பிரபல மலையாள இயக்குனர் சித்திக் இயக்கிய 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' திரைப்படம் வரும் பொங்கல் ரிலீஸ் பட்டியலில் இணைந்துள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்

மகிழ்ச்சி. மகிழ்ச்சி. மகிழ்ச்சியோ மகிழ்ச்சி' அருவி இயக்குனர் கூறியது ஏன் தெரியுமா?

கடந்த வாரம் வெளியான ;'அருவி' திரைப்படம் இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த படங்களில் ஒன்று என்று படம் பார்த்தவர்கள் பாராட்டி வருகின்றனர்.

ஓகி புயலால் திசைமாறிய 30 குமரி மீனவர்கள் கரை சேர்ந்த அதிசயம்

சமீபத்தில் ஏற்பட்ட ஓகி புயல் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள் காணாமல் போன நிலையில் அவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சிகள் செய்து வருகின்றனர்.

தத்தெடுத்த கிராமத்திற்கு சென்று பொதுமக்களை உற்சாகப்படுத்திய சச்சின் தெண்டுல்கர்

பாரத பிரதமர் நரேந்திரமோடியின் திட்டங்களில் ஒன்றாகிய எம்.பி.க்கள் கிராமத்தை தத்தெடுக்கும் திட்டத்தின் கீழ், முன்னாள் கிரிக்கெட் வீரரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான சச்சின் டெண்டுல்கர்,