அஜித்தின் 'நேர் கொண்ட பார்வை': சூர்யாவின் அசத்தல் ரியாக்சன்

  • IndiaGlitz, [Friday,August 09 2019]

அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி முழுக்க முழுக்க பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. இதுவரை ஒரு நெகட்டிவ் விமர்சனம் கூட வெளிவந்ததாக தகவல்கள் இல்லை. மேலும் அஜித்தின் நடிப்பு மற்றும் எச்.வினோத்தின் இயக்கத்தை படம் பார்த்தவர்கள் பாராட்டி வருகின்றனர். அஜித் ரசிகர்கள் மட்டுமன்றி நடுநிலை ரசிகர்களும் கோலிவுட் திரையுலக பிரபலங்களும் முதல் நாளே இந்த படத்தை பார்த்து தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர். இந்த படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பால் ஓபனிங் வசூல் பெரிய சாதனையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று அஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' ரிலீஸ் ஆனதையடுத்து நடிகர் சூர்யா, நடிகர் அஜீத்துக்கும் இயக்குனர் வினோத்துக்கும் வாழ்த்து தெரிவித்து பொக்கே அனுப்பி உள்ளார். மேலும் இந்த படம் வெற்றி அடைய தனது வாழ்த்தையும் தனது கைப்பட கடிதம் எழுதி சூர்யா அனுப்பி உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஒவ்வொரு முறை பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது பொக்கே அனுப்பி வாழ்த்து தெரிவித்திருப்பதை ஒரு வழக்கமாக வைத்திருக்கும் சூர்யாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.

More News

பிக்பாஸ் போட்டியாளரின் ஹனிமூன் புகைப்படங்கள் வைரல்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த 46 நாட்களாக விறுவிறுப்புடன் சென்று கொண்டிருக்கின்றது. குறிப்பாக நேற்றைய கஸ்தூரியின் வரவு இந்த நிகழ்ச்சியை கூடுதலாக சுவாரஸ்யமாக்கும்

4 பேர லவ் பண்றது காமெடியா? கவினை கலாய்த்த கஸ்தூரி

பிக்பாஸ் வீட்டில் கடந்த இரண்டு வாரங்களாக நடந்த முக்கோணக் காதல் மற்றும் சோக காதல் ஆகியவற்றால் பார்வையாளர்கள் சோர்ந்து போயிருந்த நிலையில் திடீரென கஸ்தூரியின் வரவு சுறுசுறுப்பாக்கி உள்ளது.

தனுஷின் 'அசுரன்' ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு

நடிகர் தனுஷ் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் 'அசுரன்' மற்றும் துரை செந்தில்குமார் இயக்கத்தில் 'பட்டாஸ்' ஆகிய திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் 'அசுரன்'

மீண்டும் பணமதிப்பிழப்பா? ஏடிஎம் நோக்கி குவியும் பொதுமக்கள்

கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி இரவு தொலைக்காட்சியில் பேசிய பிரதமர் மோடி, திடீரென 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்க

கஸ்தூரிக்கு ஸ்பெஷல் பவர்: ஜெயில் தண்டனைக்கு பதில் கஸ்தூரி தண்டனையா?

பிக்பாஸ் வீட்டில் இன்று கஸ்தூரி புதிதாக நுழைந்த நிலையில் அவர் சிறப்பு விருந்தினரா? அல்லது புதிய போட்டியாளராக? என்ற குழப்பம் இருந்து வந்தது.