ரசிகர்களின் வங்கி கணக்கில் பணம் டெபாசிட்: சத்தமின்றி சூர்யா செய்த உதவி!

  • IndiaGlitz, [Wednesday,June 09 2021]

இந்த கொரோனா பெருந்தொற்று நேரத்தில் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் வேலையின்றி வருமானமின்றி உள்ளனர் என்பது தெரிந்ததே. ஏழை மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் ரூபாய் 4000 மற்றும் மளிகை பொருட்கள் உள்ளிட்ட உதவிகளை தமிழக அரசு செய்து வருகிறது. அது மட்டுமின்றி திரையுலக பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்களும் தங்களால் முடிந்தளவிற்கு ஏழை மக்களின் பசியை போக்கி வருகின்றனர்

இந்த நிலையில் நடிகர் சூர்யா சத்தமின்றி வேலையின்றி வருமானமின்றி கஷ்டப்படும் தனது ரசிகர்களுக்கு அவர்களுடைய வங்கிக் கணக்கில் பணம் செலுத்தி உள்ள தகவல் வெளிவந்துள்ளது. நேற்று மட்டும் 250 சூர்யா ரசிகர்களின் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

தனது படங்களை பார்த்து மகிழ்ச்சி அடைந்து, தனது படங்களை வெற்றியடையச் செய்யும் ரசிகர்களுக்கு இந்த இக்கட்டான நேரத்தில் உதவி செய்யும் வகையில் சூர்யா அனுப்பிய பணம் அவர்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதனை அடுத்து சூர்யாவின் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதை மற்ற மாஸ் நடிகர்களும் பின்பற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.

More News

பொதுமக்கள் மத்தியில் ஜனாதிபதியை பளார் விட்ட இளைஞர் கைது!

பொதுமக்கள் மத்தியில் ஜனாதிபதியை கன்னத்தில் பளாரென அறைந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முதலமைச்சரின் தனிப்பிரிவு இணையதளம்: பொதுமக்கள் நேரடியாக புகாரளிக்க வசதி!

தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளதை அடுத்து பொதுமக்கள் நேரடியாக புகார் அளிக்கும் வசதி ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

நர்ஸ்-ன் கவனக்குறைவு....! பச்சிளங்குழந்தையின் விரல் போன பரிதாபம்...!

செவிலியர் ஒருவரின் கவனக்குறைவால், பிறந்து 14 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையின் விரல் பரிதாபமாக பறிபோயுள்ளது.

கொரோனா தொடர்பான பொருட்களுக்கு விலை நிர்ணயம்....! தமிழக அரசு அறிவிப்பு....!

கொரோனா சார்ந்த பொருட்களான முகக்கவசம் கிருமிநாசினி உள்ளிட்ட பொருட்களுக்கு, தமிழக அரசு விலையை நிர்ணயம் செய்துள்ளது.

'சீயான் 60' படம் குறித்த சூப்பர் அப்டேட் கொடுத்த கார்த்திக் சுப்புராஜ்

பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜகமே தந்திரம்' திரைப்படம் வரும் 18ம் தேதி ஓடிடியில் வெளியாக இருக்கும் நிலையில் அவர் இயக்கி வரும் மற்றொரு திரைப்படமான 'சியான் 60 படம்