'சூரரை போற்று' படத்திற்காக மீண்டும் ஒரு பாடலை பாடிய சூர்யா!

  • IndiaGlitz, [Tuesday,November 26 2019]

நடிகர் சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள ’சூரரைப்போற்று’ என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் இந்த படத்தின் மாறாமாறா என்ற தீம் மியூசிக் பாடல் உருவாகி இருப்பதாகவும், இந்த தீம் மியூசிக் பாடலை சூர்யா தனது சொந்த குரலில் பாடி உள்ளதாகவும் இந்த பாடல் சூர்யாவின் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக இருக்கும் என்றும் சமீபத்தில் ஜிவி பிரகாஷ் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்திருந்தார்

இந்த தகவல் ரசிகர்களிடையே பெரும் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏற்கனவே அஞ்சான் படத்தில் சூர்யா ஒரு பாடலை பாடி இருக்கும் நிலையில் தற்போது இந்தப் படத்திலும் அவர் பாடி உள்ளார் என்ற செய்தி அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி வழங்குவதாக இருந்தது

இந்த நிலையில் சூரரை போற்று படத்தின் தெலுங்கு பதிப்பு படத்திலும் இதே பாடலை சூர்யா தெலுங்கிலும் பாடி இருப்பதாகவும், இந்த பாடல் நேற்று ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஜீவி பிரகாஷ் சற்றுமுன் அறிவித்துள்ளார்

எனவே ஒரே பாடலை தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் சூர்யா பாடி உள்ளதால் இரு மாநிலங்களில் உள்ள சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

More News

திருமாவளவன் விவகாரம்: காயத்ரி ரகுராமின் அடுத்த அதிரடி

இந்துக்கோயில் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை கூறியதாக செய்திகள் வெளிவந்த நிலையில்

தர்பார் அப்டேட்: டுவிட்டர் பயனாளியால் ஷாக் ஆன பாடலாசிரியர் விவேக்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் தர்பார்' திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான 'சும்மா கிழிகிழி' என்ற பாடல்

அமெரிக்காவில் இந்திய மாணவி பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை: அதிர்ச்சி தகவல்

இந்திய மாணவி ஒருவர் அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

எனக்கும் யோகிபாபுவுக்கும் திருமணமா? நடிகை விளக்கம்

பிரபல காமெடி நடிகர் யோகிபாபு அவர்களுக்கு திருமணம் நடந்து விட்டதாக நேற்று சமூக வலைதளங்களில் வதந்திகள் கிளம்பியதும் இந்த வதந்திக்கு யோகிபாபு

விருந்துக்கு சென்ற உறவினர்கள் வீட்டில் கொள்ளையடித்த காதல் ஜோடி கைது!

நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீட்டிற்கு விருந்துக்கு சென்று அந்த வீட்டில் உள்ள பொருட்களை நோட்டமிட்டு அதன் பின் இன்னொரு நாள் அதே வீடுகளில் கொள்ளை அடித்த காதல் ஜோடி ஒன்றை போலீசார் கைது செய்துள்ளனர்