மீண்டும் ஒரே படத்தில் இணையும் சூர்யா-கார்த்தி

  • IndiaGlitz, [Thursday,January 31 2019]

தமிழ் சினிமாவில் சகோதர நடிகர்கள் இருவருமே முன்னணி நடிகர்களாக இருப்பது அபூர்வமாக நடக்கும் நிகழ்வு. அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளாக கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களாக இருந்து, வெற்றிப்படங்களை கொடுத்து வரும் சகோதரர்களான சூர்யா, கார்த்தி இருவரும் இணைந்து முக்கிய வேடத்தில் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்பதே இருதரப்பு ரசிகர்களின் நீண்ட நாள் விருப்பம்.

அந்த வகையில் கடந்த ஆண்டு வெளிவந்த கார்த்தியின் 'கடைக்குட்டி சிங்கம்' திரைப்படத்தில் சூர்யா ஒரே ஒரு காட்சியில் மட்டும் நடித்து தற்போதைக்கு ரசிகர்களின் ஆசையை பூர்த்தி செய்துள்ளார். இந்த நிலையில் கார்த்தி நடித்துள்ள 'தேவ்' படத்தில் தற்போது சூர்யா இணைந்துள்ளார்.

ஆம், கார்த்தியின் 'தேவ்' படத்தின் டிரைலர் வரும் ஜனவரி 31ஆம் தேதி வெளியாகும் என்ற தகவலை ஏற்கனவே பார்த்தோம். தற்போது வந்துள்ள தகவலின்படி இந்த படத்தின் டிரைலரை நடிகர் சூர்யா இன்று மாலை 5 மணிக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டிரைலர் கார்த்தி ரசிகர்களை பெருமளவு கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

More News

இன்று விஜயகாந்துக்கு மறக்க முடியாத கொண்டாட்டமான நாள்

விஜயகாந்த் உடல்நல சிகிச்சைக்காக கடந்த சில மாதங்களுக்கு முன் அமெரிக்கா சென்றாலும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல், குடியரசு தினம் என ஒவ்வொரு முக்கியமான நாட்களுக்கும் வாழ்த்து கூற அவர் மறந்ததில்லை

தல 59: வித்யாபாலன் கேரக்டர் குறித்த முக்கிய தகவல்

'தல 59' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது என்பது தெரிந்ததே

விஜயகாந்த், மாதவன் பட நாயகிக்கு நடுரோட்டில் நடந்த விபரீதம்

விஜயகாந்த் நடித்த 'ராஜ்ஜியம்',  மாதவன் நடித்த 'நான் அவள் அது' மற்றும் ஒருசில தெலுங்கு, இந்தி படங்களில் நடித்தவர் நடிகை ஷமிதா ஷெட்டி. இவர் தற்போது 'தி டெனட்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

உங்களுக்கும் ஒரு காலம் வரும்: பிரபல அரசியல் தலைவருக்கு ரஜினி வாழ்த்து

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பின் அவரது மகன் மு.க அழகிரி மீண்டும் திமுகவில் இணைய முயற்சி செய்தார்.

'தில்லுக்கு துட்டு 2' சென்சார் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த தகவல்

சந்தானம் நடித்த 'தில்லுக்கு துட்டு' திரைப்படம் கடந்த 2016ஆம் ஆண்டு நல்ல வெற்றியை பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி சரியான ரிலீஸ் தேதிக்காக காத்திருந்தது.