close
Choose your channels

'சூர்யாவின் சனிக்கிழமை': மாஸ் நடிகரின் படத்திற்கு வைக்கப்பட்ட டைட்டில்..!

Monday, October 23, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தெலுங்கு திரையுலகின் மாஸ் நடிகரின் திரைப்படத்திற்கு ’சூர்யாவின் சனிக்கிழமை’ என தமிழில் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

பிரபல தெலுங்கு நடிகர் நானி நடிக்கவிருக்கும் 31வது படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த படத்தில் நானி ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க இருப்பதாகவும் வில்லனாக எஸ்ஜே சூர்யா நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டு நிமிட வீடியோ வெளியாகி உள்ள நிலையில் அதில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளில் இந்த படம் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு ஐந்து மொழிகளுக்கும் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் தமிழில் இந்த படத்திற்கு ’சூர்யாவின் சனிக்கிழமை’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த புரமோஷன் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

விவேக் அதிரேயா இயக்கத்தில் முரளி ஒளிப்பதிவில் கார்த்திகா படத்தொகுப்பில் ஜேக்ஸ் பிஜாய் இசையில் இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படம் நானிக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.