சுசீந்திரன் இயக்கும் அடுத்த படத்தின் தலைப்பு

  • IndiaGlitz, [Thursday,September 07 2017]

பிரபல இயக்குனர் சுசீந்திரன் தற்போது 'நெஞ்சில் துணிவிருந்தால்' என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தை அவர் தீபாவளி தினத்தில் வெளியிட திட்டமிட்டிருக்கின்றார் என்பதும் ஏற்கனவே நாம் பார்த்ததுதான்.

இந்த நிலையில் சுசீந்திரன் மற்றொரு படத்தையும் இயக்கி வருகிறார். சூரி முக்கிய கதாபாத்திரத்திலும், முழுக்க முழுக்க புதுமுகங்களும் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு 60% முடிந்துவிட்டது. 

இந்த படத்தின் தலைப்பு நாளை காலை 10 மணிக்கு வெளியிடவுள்ளதாக இயக்குனர் சுசீந்திரன் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். மேலும் இந்த தலைப்பை அவரது பெற்றோர்கள் வெளியிடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

ஆக மொத்தத்தில் சுசீந்திரன் இயக்கத்தில் இந்த வருடமே இரண்டு படங்கள் வெளியாக அதிக வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஆசிரியர் ஸ்டிரைக் எதிரொலி: மாணவர்களுக்கு பாடம் எடுத்த சேலம் பெண் கலெக்டர்

சமீபத்தில் சேலம் மாவட்டத்தின் முதல் பெண் கலெக்டராக பதவியேற்ற ரோகிணி அவர்கள் மாற்றுத்திறனாளிகளிடம் கனிவுடன் நடந்து கொண்டதால் பெரும் பாராட்டுக்களை பெற்றார் .

11 ஆண்டுகளில் இடிந்து விழுந்த கோவை சோமனூர் பேருந்து நிலையம். அதிர்ச்சியில் பொதுமக்கள்

கோவை சோமனூர் பேருந்து நிலையத்தின் மேற்கூரை இன்று திடீரென இடிந்து விழுந்ததில் பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கோடிகள் எனது குறிக்கோள் அல்ல! திரையுலகம்தான் முக்கியம்: விஷால்

பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள 'துப்பறிவாளன்' ..

நடிகை லலிதாகுமாரியின் சகோதரர் மகள் திடீர் மாயம்

பழம்பெரும் நடிகர் ஆனந்தன் அவர்களின் பேத்தியும், நடிகைகள் டிஸ்கோ சாந்தி, லலிதாகுமாரி ஆகியோர்களின் சகோதரர் மகளுமான அபிர்ணா...

நீட் தேர்வை எதிர்த்து வேலையை ராஜினாமா செய்த அரசுப்பள்ளி ஆசிரியை

நீட் தேர்வை எதிர்த்து அரியலூர் அனிதா தன்னுடைய உயிரையே தியாகம் செய்த நிலையில் அதே நீட் தேர்வை எதிர்த்து விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியை சபரிமாலா என்பவர் தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார்...