சென்னை சில்க்ஸ் தீ விபத்து எதிரொலி: அடுக்குமாடி குடியிருப்பு மக்கள் வெளியேற்றம்

  • IndiaGlitz, [Thursday,June 01 2017]

சென்னை தி.நகரிலுள்ள சென்னை சில்க்ஸ் கட்டிடம் தொடர்ந்து இரண்டாவது நாளாக எரிந்து வருகிறது. கட்டிடத்தின் பெரும்பகுதி இடிந்துவிட்ட போதிலும் தீ இன்னும் கட்டுக்குள் வரவில்லை என்பதால் சுமார் 450 தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.
இந்த நிலையில் தீவிபத்து காரணமாக தி.நகரின் பல பகுதிகளில் புகைமூட்டம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக குழந்தைகள், வயதானவர்கள், ஆஸ்துமா நோயாளிகள் மூச்சுவிடவே சிரமப்படுகின்றனர். இந்த நிலையில் போலீசாரின் அறிவுறுத்தலின்படி சென்னை சில்க்ஸ் கட்டிடத்திற்கு அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள், தங்கள் உறவினர்களின் வீடுகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். புகை முற்றிலுமாக நீங்கியவுடன் அவர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இந்த தீவிபத்தால் தி.நகர் பகுதியில் ரூ.50 கோடிக்கு மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது என்று சென்னை திநகர் வர்த்தகச் சங்கத்தின் செயலாளர் சாரதி தெரிவித்துள்ளார். போலீசாரின் அறிவுறுத்தலின்படி அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன என்றும் கடைகளை திறக்க போலீசாரின் மறு உத்தரவுக்காக வியாபாரிகள் காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

More News

சென்னை சில்க்ஸ் உள்ளே உள்ள தங்கம் என்ன ஆகியிருக்கும்? ஒரு திடுக்கிடும் தகவல்

இன்று அதிகாலை சென்னை தி.நகர் சென்னை சில்க்ஸ் கடையில் ஏற்பட்ட தீ விபத்து சென்னை நகரையே உலுக்கியுள்ளது...

திருமணம் ஆகப்போகும் நேரத்தில் இது தேவையா? சமந்தாவை வறுத்தெடுத்த ரசிகர்கள்

பிரபல நடிகை சமந்தா தமிழ், மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நிலையில்...

கார் எரிந்து மூவர் பலியான சம்பவத்தில் திடுக்கிடும் திருப்பம்! குடும்பத்துடன் தற்கொலையா?

கடந்த 27ஆம் தேதி சென்னையை சேர்ந்த ஜெயதேவன் என்ற ஆடிட்டரின் குடும்பத்தினர் சென்ற கார் மாமல்லபுரம்...

சென்னை சில்க்ஸ் கட்டிடம் இடிந்து விழுந்தது. தி.நகரில் பெரும் பரபரப்பு

இன்று அதிகாலை முதல் சென்னை தி.நகர் சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் தீ கொளுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கும் நிலையில்...

தீயை அணைக்கும் செலவை சென்னை சில்க்ஸ் நிர்வாகத்திடம் வசூலிக்கப்படும். அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை தி.நகர் சென்னை சில்க்ஸ் ஜவுளிக்கடையில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது...