சிம்புவுக்கு திருமணம் எப்போது? சென்னை திரும்பிய ராஜேந்தர் பேட்டி!

  • IndiaGlitz, [Friday,July 22 2022]

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் டி ராஜேந்தர் கடந்த சில நாட்களுக்கு முன் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் அமெரிக்காவில் சிகிச்சை முடித்து விட்டு இன்று காலை டி ராஜேந்தர் சென்னை திரும்பினார்.

இன்று அதிகாலை சென்னை திரும்பி டி ராஜேந்தர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: சக்கரம் சுழல ஆரம்பித்தால் கீழே இருப்பவர்கள் மேலே செல்வார்கள், மேலே இருப்பவர்கள் கீழே செல்வார்கள். கல்யாணம் என்பதெல்லாம் இறைவன் நிச்சயிக்க வேண்டும் என்றும் மனிதனால் நிச்சயம் செய்ய முடியாது என்றும் இறைவன் நிச்சயித்தால் சிம்புவுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்று டி ராஜேந்தர் கூறினார்.

நிச்சயமாக சிம்புவின் நல்ல மனதிற்கு இறைவன் ஒரு நல்ல பெண்ணை, நல்ல குலமகளாக, திருமகளாக, எங்கள் வீட்டுக்கு நல்ல மருமகளாக இறைவன் அனுப்புவார் என்று நான் அனைத்து மத இறைவனை வேண்டி கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார்

மேலும் சிறப்பு தோற்றத்தில் சிம்பு நடித்த ’மஹா’ என்ற திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது என்றும், அந்த படம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றும் டி ராஜேந்தர் கூறினார்.

More News

'என்னை கடலுக்கு கூட்டிட்டு போறியா? கிருத்திகா உதயநிதியின் 'பேப்பர் ராக்கெட்' டிரைலர்

இயக்குனர் கிருத்திகா உதயநிதி இயக்கிய 'பேப்பர் ராக்கெட்' என்ற திரைப்படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

உண்மையிலேயே அவரை மிஸ் செய்கிறேன்: குஷ்புவின் நெகிழ்ச்சியான டுவிட்!

உண்மையிலேயே அவரை மிஸ் செய்கிறேன் என மறைந்த பிரபல நடிகர் குறித்து நடிகை குஷ்பு பதிவு செய்து உள்ளார் 

சிம்புவை திருமணம் செய்ய தர்ணா செய்த நடிகை: திடீரென 'அண்ணா' என அழைத்ததால் பரபரப்பு

சிம்புவை தான் திருமணம் செய்வேன் என்றும் நானும் அவரும் 10 ஆண்டுகளாக காதலித்து வருகிறோம் என்றும் கூறிய நடிகை ஒருவர் திடீரென சிம்புவை 'அண்ணா' என்று அழைத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

அடுத்த தரமான நேரடி ரிலீஸ்: முன்னணி நடிகையின் சொந்த படத்தை ரிலீஸ் செய்யும் ஹாட்ஸ்டார்!

முன்னணி ஓடிடி தளங்களில் ஒன்றான ஹாட்ஸ்டார் அடுத்தடுத்து நேரடி தமிழ் திரைப்படங்களை ரிலீஸ் செய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'O2'

பிரபுதேவாவின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு: செம கில்லர் படம் என தகவல்!

பிரபுதேவா நடிப்பில் உருவான 'மை டியர் பூதம்' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படம் குழந்தைகளுக்கான படம்