ஒரே படத்தில் தமன்னா, காஜல் அகர்வால், ஸ்ரீதிவ்யா

  • IndiaGlitz, [Monday,November 16 2015]

ஆர்யா, அனுஷ்கா நடிப்பில் கே.எஸ். பிரகாஷ்ராவ் இயக்கியுள்ள இஞ்சி இடுப்பழைகி' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் விரைவில் வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்தில் மொத்தம் ஏழு பிரபல நட்சத்திரங்கள் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஏற்கனவே இந்த படத்தில் நாகார்ஜூனன் மற்றும் ஜிவா-ஹன்சிகா ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், தமன்னா, காஜல் அகர்வால், ஸ்ரீதிவ்யா, பாபிசிம்ஹா, ராணா, ரேவதி ஆகியோர்களும் சிறப்பு தோற்றத்தில் இந்த படத்தில் நடித்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.

சிறப்பு தோற்றத்தில் நடிப்பவர்கள் அனைவரும் ஆர்யாவுக்கு நண்பர்களாக நடித்துள்ளதாகவும், ரேவதி மட்டும் அழகுக்கலை நிபுணராக நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே பெங்களூர் டேய்ஸ்' தமிழ் ரீமேக்கில் பாபிசிம்ஹா, ராணா, ஸ்ரீதிவ்யா ஆகியோர் ஆர்யாவுடன் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

வேதாளம்' வெற்றியால் சேலம் விநியோகிஸ்தரின் அன்பு பரிசு

கடந்த தீபாவளி தினத்தில் வெளியான அஜீத்தின் வேதாளம்' திரைப்படம், தொடரும் கனமழையிலும் வசூலில் சாதனை புரிந்து வருகிறது...

'புரூஸ் லீ' பிறந்த தினத்தில் 'புரூஸ் லீ' சிங்கிள் டிராக்

'டார்லிங்', 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா' என இரண்டு ஹிட் படங்களை கொடுத்த இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ், அடுத்ததாக குழந்தைகளுக்காக தரவுள்ள முழுநீள ஆக்சன் படம் 'புரூஸ் லீ. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.....

லட்சுமி மேனனுக்கு அஜித் கொடுத்த தீபாவளி போனஸ்?

கடந்த தீபாவளி தினத்தில் வெளியான அஜீத்தின் 'வேதாளம்' வெற்றி நடை போட்டு வரும் நிலையில், இந்த படத்தில் அஜீத்துக்கு அடுத்தாற்போல் நடிப்பில் பாராட்டுக்களை பெற்றவர் லட்சுமி மேனன்....

உத்தம வில்லன்' படத்திற்கு 'லாஸ் ஏஞ்சல்ஸ்' விருது கிடைக்குமா?

Los Angeles Independent Film Festival Awards என்ற விழா ஒவ்வொரு வருடமும் ஹாலிவுட் மற்றும் பிறநாடுகளின் சிறந்த படங்களுக்கு விருது வழங்கும் விழாவாக நடைபெற்று வருகிறது...

கபாலி, விஜய் 59' படங்களின் ரிலீஸ் தேதி?

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரும், பிரபல தயாரிப்பாளருமான கலைப்புலி எஸ்.தாணு தற்போது ஒரே நேரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'கபாலி' மற்றும் இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 59' ஆகிய படங்களை தயாரித்து வருகிறார்....