close
Choose your channels

ஒரே படத்தில் தமன்னா, காஜல் அகர்வால், ஸ்ரீதிவ்யா

Monday, November 16, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆர்யா, அனுஷ்கா நடிப்பில் கே.எஸ். பிரகாஷ்ராவ் இயக்கியுள்ள இஞ்சி இடுப்பழைகி' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் விரைவில் வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்தில் மொத்தம் ஏழு பிரபல நட்சத்திரங்கள் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஏற்கனவே இந்த படத்தில் நாகார்ஜூனன் மற்றும் ஜிவா-ஹன்சிகா ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், தமன்னா, காஜல் அகர்வால், ஸ்ரீதிவ்யா, பாபிசிம்ஹா, ராணா, ரேவதி ஆகியோர்களும் சிறப்பு தோற்றத்தில் இந்த படத்தில் நடித்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.

சிறப்பு தோற்றத்தில் நடிப்பவர்கள் அனைவரும் ஆர்யாவுக்கு நண்பர்களாக நடித்துள்ளதாகவும், ரேவதி மட்டும் அழகுக்கலை நிபுணராக நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே பெங்களூர் டேய்ஸ்' தமிழ் ரீமேக்கில் பாபிசிம்ஹா, ராணா, ஸ்ரீதிவ்யா ஆகியோர் ஆர்யாவுடன் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.