தயவுசெய்து இதைமட்டும் யாரும் செய்யாதீங்க: தமன்னா வேண்டுகோள்

  • IndiaGlitz, [Friday,May 22 2020]

தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான தமன்னா, இந்த கொரோனா விடுமுறையில் அவ்வப்போது தனது சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் என்பது தெரிந்ததே.

அந்த வகையில் தற்போது அவர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தலைகீழாக நிற்கும் பயிற்சியை செய்கிறார். எந்தவிதமான பிடிப்பும் இன்றி அவரே தலையை கீழே வைத்து காலை மேலே தூக்கி உயர்த்துகிறார். அவரருகில் உதவிக்கு ஒரு பயிற்சியாளர் இருந்தாலும் அவரது உதவி பெரிதாக இல்லாமலே அவர் தலைகீழாக நிற்கின்றார். இருப்பினும் அவர் கடைசியில் கீழே விழுந்துவிடுவதுபோல் அந்த வீடியோ முடிகிறது.

இதுகுறித்து தமன்னா கூறியபோது, ‘வீழ்ச்சி மற்றும் தோல்வியினால் மனம் துவண்டுவிட வேண்டாம். உங்களுக்கு கிடைக்க வேண்டிய சரியானது, பல தோல்விகளுக்கு பின்னரே கிடைக்கும். பலமுறை முயற்சி செய்து, பலமுறை விழுந்த பின்னரே என்னாலும் தலைகீழாக நிற்க முடிந்தது. ஆனால் தயவு செய்து யாரும் இதனை பயிற்சியாளர் இல்லாமல் தனியாக செய்ய வேண்டாம்’ என்று தமன்னா கூறியுள்ளார்.

More News

1 கோடியே 70 லட்சம் பேரை காவு வாங்கிய ஸ்பானிஷ் ஃப்ளூ!!! நோயிலிருந்து இந்தியா மீண்ட கதை!!!

இன்ஃப்ளூயன்ஸா எனப்படும் ஸ்பானிஷ் காய்ச்சல் உலகம் முழுவதும் 5 கோடி மக்களை கொன்று குவித்ததாக உலகச் சுகாதார அமைப்பும் அமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டு மையமும் தகவல் தெரிவிக்கிறது.

தவறான செய்தியை பகிர வேண்டாம்: விஜய்சேதுபதி பட தயாரிப்பாளர் வேண்டுகோள்

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் பிரபல இயக்குனர் சீனு ராமசாமி இயக்கிய 'இடம் பொருள் ஏவல்' என்ற திரைப்படம் கடந்த ஆண்டே ரிலீசுக்கு தயாரானது.

கொரோனா நேரத்தில் எந்த பொருளை வாங்கலாம்??? எதை வாங்கக் கூடாது??? நுகர்வோருக்கு சில ஆலோசனைகள்!!!

கொரோனா ஊரடங்கில் தேங்கியிருந்த அனைத்து உற்பத்திப் பொருள்களையும் விற்றுத் தீர்த்து விடவேண்டும் என்ற அவசரத்தில் தற்போது வணிகர்கள் பல்வேறு திட்டங்களை தீட்டி வருகின்றனர்.

தெருவில் பழம் விற்கும் நடிகர்: ஊரடங்கால் ஏற்பட்ட பரிதாபம்

கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக இந்தியாவில் பல்வேறு துறைகளில் பெரும் பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளை முதல் ஆட்டோக்கள் ஓடலாம்: ஆனால் ஒரு நிபந்தனை

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து நாடு முழுவதும் மக்கள் ஸ்தம்பித்து போயுள்ளனர்