'ஜெயிலர்' படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த தமன்னா.. வைரல் புகைப்படம்..!

  • IndiaGlitz, [Saturday,May 27 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’ஜெயிலர்’. இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பாக ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டதாகவும் விரைவில் அவர் தனது பகுதியின் டப்பிங் பேச இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் நடிகை தமன்னா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் இந்த படத்தின் சூப்பர் அப்டேட்டை தெரிவித்துள்ளார். அதாவது இந்த படத்திற்காக பிரம்மாண்டமாக உருவாக்கப்படும் பாடல் காட்சி ஒன்றில் தான் நடித்துக் கொண்டிருப்பதாகவும் அந்த பாடல் காட்சிக்கான ரிகர்சல் குறித்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தமன்னா பதிவு செய்துள்ள புகைப்படத்தில் நடன பயிற்சியாளர் நடன கலைஞர்களுக்கு பயிற்சி அளித்துக் கொண்டிருக்கும் காட்சிகள், அதை நெல்சன் பார்வையிடும் காட்சிகள், மேலும் நடன அந்த பயிற்சியை கவனித்துக் கொண்டிருக்கும் தமன்னா ஆகியவை உள்ளன. மேலும் இந்த புகைப்படத்தில் நூற்றுக்கணக்கான டான்ஸர்கள் இருப்பதால் இந்த பாடல் பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிகிறது.

ஆனால் அதே நேரத்தில் இந்த பாடலில் ரஜினிகாந்த் இருப்பாரா என்பது குறித்த தகவல் எதுவும் இல்லை. இருப்பினும் தமன்னாவின் சிறப்பான டான்ஸ் இந்த பாடலில் இடம் பெற்று இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினிகாந்த், சிவராஜ்குமார், மோகன்லால், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில், ஜாக்கி ஷெராப், வசந்த் ரவி, விநாயகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, உட்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவும், நிர்மல் படத்தொகுப்பும் செய்து வருகின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

More News

முதல் திருமண நாளில் குழந்தையுடன் சூப்பர் போட்டோஷூட்.. அஜய்-ஜெஸ்ஸி தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

சூப்பர் சிங்கர் பாடகர் அஜய் மற்றும் அவரது மனைவி ஜெஸ்ஸி ஆகியோருக்கு சமீபத்தில் குழந்தை பிறந்த நிலையில் தற்போது தங்களது முதல் வருட திருமண நாளை கொண்டாடியதோடு, குழந்தையுடன் கூடிய சூப்பர்

எளிமையான தோற்றத்தால் வசீகரித்தவர்… பாலிவுட் நடிகையின் கேன்ஸ் புகைப்படம்!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் தயாரிப்பாளராகவும் தொழில் அதிபராகவும் இருந்துவரும் நடிகை ஒருவர் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துகொண்ட புகைப்படம்

முதல் இந்தியர் இவர்தான்… மிரள வைக்கும் விராட் கோலியின் சோஷியல் மீடியா சாதனை!

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாகவும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் முன்னாள் கேப்டனாகவும் இருந்து தற்போது முக்கிய வீரராக விளையாடி வரும் விராட் கோலி

கோமாளிகள், சோம்பேறிகள், முட்டாள்கள்: கோவிலுக்கு சென்ற இளம் பெண்களை திட்டிய கங்கனா..!

அரைகுறை ஆடையுடன் கோவிலுக்கு சென்ற இளம் பெண்களின் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்த நடிகை கங்கனா ரனாவத், 'சோம்பேறிகள், முட்டாள்கள் என திட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஐபிஎல் நிறைவு விழாவில் பாட்டு பாடும் 'அரபிக்குத்து' பாடகி..! அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ஐபிஎல் இறுதிப் போட்டி வரும் ஞாயிறு அன்று நடைபெற இருக்கும் நிலையில் இந்த போட்டியின் நிறைவு விழாவில் 'அரபிக்குத்து' உட்பட பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடிய பாடகி பாட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக