close
Choose your channels

அரசியல் கட்சி ஆரம்பித்துள்ள தமிழ் நடிகர்.. நடிகர்கள் கட்சி ஆரம்பிப்பதில் உடன்பாடில்லை என பேட்டி..

Friday, February 16, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் விஜய் சமீபத்தில் அரசியல் கட்சி தொடங்கிய நிலையில் விஷால் உள்பட மேலும் சில நடிகர்கள் அரசியல் கட்சி தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் புதிய அரசியல் கட்சியை தொடங்கி அந்த கட்சியை டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார்.

’இந்திய ஜனநாயக புலிகள்’ என்று தனது கட்சிக்கு பெயர் வைத்துள்ளதாக கூறிய அவர் தமிழ்நாட்டில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும் ஒரு தமிழரை பிரதமர் ஆக்க முடியவில்லை என்று கூறியுள்ளார்

கட்சியின் மாநாடு விரைவில் நடைபெற இருப்பதாகவும் அதில் நிறைய விஷயங்கள் பேசுவேன் என்றும் தெரிவித்தார். மேலும் வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் என்றும் கூறினார்

மேலும் நடிகர்கள் கட்சி ஆரம்பிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என்றும் ஆனால் என்னை நான் நடிகனாகவே நினைக்கவில்லை என்றும் கடந்த ஏன் பல ஆண்டுகளாக நான் அரசியலில் இருப்பதால் தற்போது அரசியல் கட்சி தொடங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார் காவிரி போராட்டம், இலங்கை தமிழர்களுக்கான போராட்டம், கவர்னர் மாளிகையில் போராட்டம் என பல்வேறு போராட்டங்களில் நான் கலந்து கொண்டிருக்கிறேன் என்று கூறிய மன்சூர் அலிகான் ஒரு முடிவோடு அரசியல் இறங்கி இருக்கின்றேன், என்னுடைய கட்சிகள் இதுவரை 15000 பேர் இணைந்து இருக்கின்றனர், ஒரு கை பார்ப்போம் என்றும் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment
Related Videos