மாஸ்டர் படப்பிடிப்பிலிருந்து வருமான வரித்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நடிகர் விஜய்..!

  • IndiaGlitz, [Wednesday,February 05 2020]

வருமான வரித்துறை விசாரணையில் ஆஜராகும்படி நடிகர் விஜய்க்கு மாஸ்டர் படப்பிடிப்பு தளத்திற்கே வந்து சம்மன் அளித்துள்ளனர். படப்பிடிப்பு தளத்திலிருந்து அதிகாரிகளால் விஜய் அழைத்துச் செல்லப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விஜய் இதற்கு முன்பாக பிகில் திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்திருந்தது. மாநிலத்தின் பல்வேறு இடங்களில் உள்ள இதன் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், நடிகர் விஜய்க்கு சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.

முதலில் படப்பிடிப்பு குழுவினருடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், நடிகர் விஜயை சந்தித்து சம்மன் அளித்துள்ளனர். இதன்பின்னர் சுமார் ஒரு மணிநேரம் விஜயிடம் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.

படப்பிடிப்பிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு வருமான வரித்துறையினரின் முழு கட்டுப்பாட்டில் விஜய் இருப்பதாகவும், தகவல்கள் வெளியாகியுள்ளது.
 

More News

மோடி செங்கோட்டையையும் தாஜ்மஹாலையும் கூட தனியாருக்கு விற்க போகிறார்..! ராகுல் காந்தி விமர்சனம்.

. 'மேக் இன் இந்தியா' என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துகிறார் பிரதமர், ஆனால் இன்று வரை ஒரு தொழிசாலை கூட இந்தியாவில் தொடங்கப்படாதது வேதனை அளிக்கிறது என்று கூறினார் ராகுல்.

“வால்க தமில்” – தமிழகத்தில் 5, 8 ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு ரத்தினை கிண்டலித்த எஸ்.வி.சேகர்

முன்னதாக, தமிழகப் பள்ளிகளில் படிக்கும் 5, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப் படும் என்று பள்ளிக் கல்வி துறை அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

எது சிறந்த கல்வி முறை? பள்ளிகளில் தேர்வுகள் கண்டிப்பாக வைக்க வேண்டுமா? உலக நாடுகளின் கல்வி முறை என்ன சொல்கிறது???

உலக அளவில் கல்வி முறைகளில் மாற்றம் வேண்டும் என்ற குரல்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் இருக்கின்றன.

பிரதமர் மோடிக்காக அமெரிக்காவில் தயாராகும் அதிநவீன சொகுசு விமானம்..! வெறும் 8,458 கோடி ரூபாய் தான்.

பிரதமர் மோடிக்கு இந்த விமானம் 'மிதக்கும் அரண்மனை' போன்ற உணர்வைத் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தனக்கென தனி விமானம் என்ற பெருமிதத்துடன் பிரதமர் மோடி வெளிநாட்டுச் சுற்றுப்பயணம் மேற்கொள்வார்.

“சிட் டவுன் இந்தியா, ஷட் டவுன் இந்தியா, ஷட் அப் இந்தியா” என மத்திய அரசின் திட்டத்திற்கு பெயர் வைக்கலாம் – சசி தரூர்

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்த விவாதங்கள் நடைபெற்று வருகிறது