கொரோனாவை விரட்ட சொந்த கிராமத்தில் கிருமி நாசினி தெளிக்கும் தமிழ்ப்பட ஹீரோ

  • IndiaGlitz, [Saturday,March 28 2020]

கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தீவிரமாக இருந்து வரும் நிலையில் மத்திய அரசின் உத்தரவின் அடிப்படையில் தற்போது தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது.

இந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக அத்தியாவசிய தேவை இன்றி யாரும் வெளியே வரக் கூடாது என்ற கட்டுப்பாடும் வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஊரடங்கு உத்தரவை மீறி கிராமங்களில் உள்ள சில தன்னார்வ இளைஞர்கள் பலர் தங்கள் கிராமத்தை சுற்றி கிருமிநாசினியை கிராம மக்களின் நலனை முன்னிட்டு தெளித்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழ்பட ஹீரோக்களில் ஒருவரான நடிகர் விமல் தனது சொந்த கிராமமான திருச்சி மாவட்டத்தில் உள்ள பன்னாங்கொம்பு என்ற பகுதியில் தன்னார்வ இளைஞர்கள் சிலருடன் இணைந்து கிருமிநாசினி தெளிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். தன் சொந்த கிராமத்து இளைஞர்களுடன் தன்னையும் இணைத்துக் கொண்டு கிருமிநாசினியை நடிகர் விமல் தெளிக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பெரும் வரவேற்பு பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

கொரோனாவை எதிர்கொள்ள ரூ.25 கோடி நிதியுதவி செய்த '2.0' நடிகர்

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி மனித குலத்தை அச்சுறுத்தி வரும் நிலையில் கொரோனா வைரசை எதிர்கொள்ள இந்திய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது

இவர்கள் பெயரையும் இணைத்து கொள்ளுங்கள்: தமிழக அரசுக்கு கமல் வேண்டுகோள்

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக தமிழகத்தில் உள்ள ஏழை எளியவர்கள் வீட்டில் முடங்கி கிடப்பதால் அவர்களுடைய வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் உயிரிழந்த நபர்களின் உடல்களை எவ்வாறு கையாள்வது???

கொரோனா வைரஸ் உலகிற்கே புதிய நோயாக இருப்பதால் வைரஸ் நோய்த்தொற்றுக்கு ஆளாகி உயிரிழப்பவர்களை

கொரோனா வைரஸில் இருந்து முருகப்பெருமான் காப்பாற்றுவார்: யோகிபாபு

கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை திரையுலகைச் சேர்ந்த பலர் சமூக வலைதளங்களில் வீடியோக்களை வெளியிட்டு தெரிவித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே

கொரோனா வைரஸ் தடுப்பு நிதியாக ரூ.500 கோடி கொடுக்கும் டாடா!

உலகெங்கும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவிவரும் நிலையில் இந்த வைரஸிலிருந்து மக்களை காக்க அனைத்து நாடுகளின் அரசுகளும் தீவிரமாக போராடி வருகின்றன.