close
Choose your channels

14 வயதில் மகள், மீண்டும் கர்ப்பமான 'விக்ரம்' பட நடிகரின் மனைவி!

Saturday, August 27, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தில் நடித்த நடிகர் ஒருவருக்கு 14 வயதில் மகள் இருக்கும் நிலையில் மீண்டும் அவருடைய மனைவி கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மிஷ்கின் இயக்கிய முதல் திரைப்படமான ’சித்திரம் பேசுதடி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் நடிகராக அறிமுகமானவர் நரேன். இதனையடுத்து அவர் ’பள்ளிக்கூடம்’ ’அஞ்சாதே’ 'தம்பிக்கோட்டை’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார் என்பதும், சமீபத்தில் வெளியான ‘விக்ரம்’ திரைப்படத்தில் அவர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த 2007ஆம் ஆண்டு நடிகர் நரேன், மஞ்சு என்ற தொலைக்காட்சி தொகுப்பாளினியை திருமணம் செய்து கொண்ட நிலைஇயில் இந்த தம்பதிக்கு தன்மியா என்ற மகள் உள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் தனது 15வது திருமண நாளை கொண்டாடிய நடிகர் நரேன் தனது மனைவி இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ள தகவலையும் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இதனை அடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment