close
Choose your channels

மால டம் டம்… மஞ்சர டம் டம்..  பாடலுக்கு செம டான்ஸ் ஆடிய நடிகை.. வீடியோ வைரல்..!

Thursday, March 2, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில நாட்களாக மால டம் டம்… மஞ்சர டம் டம்.. என்ற பாடலுக்கு திரையுலக மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் டான்ஸ் ஆடும் வீடியோக்கள் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது தமிழ் திரையுலக நடிகை ஒருவரும் இதே பாடலுக்கு செம டான்ஸ் ஆடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

விஷால் நடித்த ’எனிமி’ திரைப்படத்தில் இடம்பெற்ற மால டம் டம்… மஞ்சர டம் டம்.. என்ற பாடல் சூப்பர்ஹிட்டானது என்பது அனைவரும் அறிந்ததே. விவேக் பாடல் வரிகளில் ஸ்ரீ வர்த்தினி, அதிதி, சத்திய யாமினி, ரோஷினி, தேஜஸ்வனி ஆகியோர் பாடிய இந்த பாடலுக்கு திரையுலக மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் நடனமாடும் வீடியோக்கள் உலா வருகின்றன. குறிப்பாக கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் தனது தங்கையுடன் இந்த பாடலுக்கு ஆடிய நடனமும், நடிகர் சித்தார்த் மற்றும் அதிதிராவ் ஹைத்ரி ஆகியோர் இந்த பாடலுக்கு ஆடிய நடன வீடியோவும் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

இந்த நிலையில் சற்று முன் நடிகை ஷெரின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதே பாடலுக்கு செம நடனம் ஆடிய வீடியோவை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ மிகப்பெரிய அளவில் இன்ஸ்டாகிராம் ரசிகர்களால் வரவேற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷ் நடித்த ’துள்ளுவதோ இளமை’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை ஷெரின், அதன் பிறகு ’விசில்’, ‘நண்பேண்டா’ உள்பட பல படங்களில் நடித்தார் என்பதும், தற்போது அவர் ’குக் வித் கோமாளி’ சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்து கொண்டுள்ளார் என்பது, குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment