close
Choose your channels

இத்தாலியில் பிகினி உடையில் தீபாவளி கொண்டாடிய தமிழ் நடிகை!

Thursday, October 27, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 24 ஆம் தேதி தீபாவளி பண்டிகை இந்தியா முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது என்பதும் குறிப்பாக தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் உள்பட இந்திய திரையுலகினர் தீபாவளி கொண்டாடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

அந்த வகையில் தீபாவளியை கொண்டாட இத்தாலி சென்ற தமிழ் நடிகை ஒருவர் பிகினி உடையுடன் கூடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகின்றன.

இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கிய ’வழக்கு எண் 18/9’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை மனிஷா யாதவ். இவர் அதன் பின்னர் ’ஆதலினால் காதல் செய்வீர்’ ’ஜன்னல் ஓரம்’ ’பட்டைய கிளப்பு பாண்டியா’ ’த்ரிஷா இல்லைனா நயன்தாரா’ ’ஒரு குப்பை கதை’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். இருப்பினும் கடந்த சில ஆண்டுகளாக இவருக்கு சொல்லிக்கொள்ளும்படி வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பெங்களூரை சேர்ந்த மாடல் அழகியான மனிஷா யாதவ் மீண்டும் தமிழ்த் திரையுலகில் வாய்ப்புகளை பெற முயற்சித்து வருகிறார். இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் மனிஷா யாதவ் இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்வார் என்பதும் அவரது ஆயிரக்கணக்கான ஃபாலோயர்கள் அந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ்களை குவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது நண்பர்களுடன் இத்தாலி சென்று தீபாவளி கொண்டாடிய மனிஷா யாதவ், அதன் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். கடலில் நீச்சல் உடையுடன் இருக்கும் இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. ’இந்த முறை நான் தீபாவளியை இந்தியாவிற்கு வெளியே இத்தாலியில் கொண்டாடுகிறேன் என்றும் அனைவருக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள்’ என்றும் அவர் அந்த பதிவில் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.