மத போதகராக மாறிய தமிழ் நடிகை!

  • IndiaGlitz, [Thursday,August 26 2021]

தமிழ் நடிகை ஒருவர் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் திடீரென கிறிஸ்துவ மத போதகராக மாறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கடந்த 1991 ஆம் ஆண்டு வெளியான ’ஈரமான ரோஜாவே’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை மோகினி. அதன் பின்னர் இவர் ’நாடோடி பாட்டுக்காரன்’ ’சின்ன மருமகள்’ ’உடன்பிறப்பு’ ’புதிய மன்னர்கள்’ ’ஜமீன் கோட்டை’ ’தாயகம்’ உள்ளிட்ட பல தமிழ் படங்களிலும் ஒரு சில மலையாளம் தெலுங்கு கன்னட படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் 1999ஆம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார் நடிகை மோகினி. இவருக்கு அனிருத் மற்றும் அத்வைத் ஆகிய 2 மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நடிகை மோகினி திடீரென கிறிஸ்துவ மத போதகராக மாறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியபோது ’என்னுடைய குடும்ப வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருக்கும் போது திடீரென ஒரு சில நிகழ்வுகளால் நான் உடலளவிலும் மனதளவிலும் பாதிக்கப்பட்டேன். தற்கொலை எண்ணம் கூட வந்தது. இதற்கு எந்த மருத்துவர்களும் தீர்வு கொடுக்க முடியவில்லை. இந்த நிலையில்தான் கிருஸ்தவ மத போதனைகளில் ஈடுபட்டேன். அப்போது எனக்கு நிம்மதி கிடைத்தது. இதனை நான் தொடர்ந்து செய்து வருகிறேன். கிறிஸ்துவ மக்களுக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்ளும் பணிகளை மனநிறைவுடன் செய்து வருகிறேன்’ என்று கூறியுள்ளார்.

More News

அடுத்தடுத்து ரிலீஸ் ஆகும் விஜய்சேதுபதியின் 4 படங்கள்!

தமிழ் திரையுலகில் மட்டுமின்றி இந்திய திரையுலகிலேயே பிஸியான நடிகர் விஜய் சேதுபதி என்று கூறலாம். அந்த அளவிற்கு அவர் கை நிறைய படங்கள் வைத்துள்ளார். அவர் நடித்து முடித்த படங்கள்

பாக்ஸிங்கை விட இது ரத்த பூமி: பசுபதிக்கு அட்வைஸ் செய்த ஆர்யா

பாக்ஸிங்கை விட இது ரத்த பூமி என டுவிட்டருக்கு வந்த நடிகர் பசுபதிக்கு நடிகர் ஆர்யா அட்வைஸ் செய்து டுவிட் ஒன்றை பதிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மீம்ஸ் கிரியேட்டர்களிடம் சிக்கிவிட்ட பிரபல அரசியல்வாதி… அவரே ரசித்த வைரல் புகைப்படம்!

காங்கிரஸ் கட்சியில் முக்கிய அரசியல் தலைவராக இருந்துவரும் சசிதரூர் பற்றிய மீம்ஸ்கள்தான் கடந்த சில தினங்களாக சோஷியல் மீடியாவில் பட்டையை கிளப்பி வருகிறது.

பிழைப்புக்காக பேருந்து ஓட்டும் முன்னாள் சிஎஸ்கே வீரர்… ரசிகர்கள் அதிர்ச்சி!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடிய இலங்கை வீரர் ஒருவர் தற்போது ஆஸ்திரேலிய தெருக்களில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.

ராகவா லாரன்ஸ் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர், இயக்குனர், நடன இயக்குனர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் உருவாகி வந்த திரைப்படம் 'ருத்ரன்'. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று