பல்லிக்கு பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்: தமிழ் நடிகைகள் கருத்து!

  • IndiaGlitz, [Sunday,April 17 2022]

பல்லிக்கு பாலியல் வன்கொடுமை செய்த கும்பல் குறித்து தமிழ் நடிகைகள் தங்களது சமூக வலைத்தளத்தில் தெரிவித்த கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. 

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தேசிய பூங்கா ஒன்றில் மானிட்டர் வகை பல்லியை 3 பேர் சேர்ந்த கும்பல் ஒன்று பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது. அதுமட்டுமின்றி இதனை அவர்கள் வீடியோவும் எடுத்துள்ளனர். இதுகுறித்து சிசிடிவி மூலம் கண்டுபிடித்த வனத்துறை அதிகாரிகள் அந்த கும்பலை பிடித்து அவர்களை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெங்கால் மானிட்டர் இனத்தைச் சேர்ந்த பல்லி, பாதுகாக்கப்பட்ட உயிரினம் என்பதால் இந்த கும்பல் செய்த குற்றம் உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் பல்லிக்கு பாலியல் வன்கொடுமை செய்த கும்பல் குறித்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, ‘ஒருவேளை பல்லி குட்டையான ஆடைகளை அணிந்து இருந்திருக்கும் என நினைக்கிறேன்’ என்று கூறியுள்ளார் .

மேலும் இதுகுறித்து அஸ்வின் நடித்த ’என்ன சொல்ல போகிறாய்’ என்ற படத்தின் நாயகி தேஜஸ்வினி கூறியபோது, ‘அந்த பல்லி இரவு நேரத்தில் வெளியே வந்ததா? குட்டையான ஆடைகளை அணிந்து இருந்ததா? கவர்ச்சியாக உடம்பை காண்பித்ததா? குடிபோதையில் இருந்ததா? இந்த உலகம் பாதிக்கப்பட்டவரை எப்படி குற்றம் சொல்ல போகிறது என்பதை அறிய காத்திருக்கிறேன்’ என்று பதிவு செய்துள்ளார்.

பல்லிக்கு பாலியல் வன்கொடுமை செய்த கும்பல் குறித்து தமிழ் நடிகைகள் தெரிவித்த கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

சியான் விக்ரமின் 'கோப்ரா' படத்தின் மாஸ் அறிவிப்பு!

சியான் விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வந்த 'கோப்ரா' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பது தெரிந்ததே.

உதயநிதியின் 'நெஞ்சுக்கு நீதி': மாஸ் அறிவிப்பை வெளியிட்டார் போனிகபூர்

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'நெஞ்சுக்கு நீதி'. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது

பூர்வீக கிராமத்தில் புதுவீடு கட்டிய தமிழ் ஹீரோ: புகைப்படங்கள் வைரல்!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் தனது பூர்விக கிராமத்தில் புது வீடு கட்டி புதுமனை புகுவிழா நடத்திய புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. 

உலகத்திலேயே சிறந்த பேச்சாளர் பணம் தான்: கருணாஸின்  'ஆதார்' டிரைலர்

நீண்ட இடைவேளைக்கு பிறகு கருணாஸ் முக்கிய வேடத்தில் நடித்துள்ள 'ஆதார்' படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகிய இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

'கே.ஜி.எஃப் 2' படம் குறித்து நடிகர் கார்த்தியின் மாஸ் வாழ்த்து!

 பிரபல கன்னட நடிகர் யாஷ் நடித்த 'கேஜிஎப் 2' என்ற திரைப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது