தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம். முழு விபரங்கள்

  • IndiaGlitz, [Monday,March 21 2016]

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 62வது பொதுக்குழு கூட்டம் நேற்று மாலை சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாடக நடிகர்கள் உள்பட உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நடிகர் சங்க தேர்தலுக்கு பின்னர் நடைபெறும் முதல் பொதுக்குழு கூட்டம் என்பதால் இந்த கூட்டத்தில் முதலில் மறைந்த திரையுலக கலைஞர்களான மனோரமா, குமரிமுத்து, கலாபவன் மணி ஆகியோருக்கு இரங்கல் தெரிவித்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

முதல் நிகழ்ச்சியாக சங்கத்தின் ஆண்டறிக்கையை துணைத்தலைவர் கருணாஸ் வாசித்தார். கல்வி, மருத்துவம், திருமணம், மற்றும் இறுதிச் சடங்கு உதவி என பலவித உதவிகள் வழங்கப்பட்டதை அவர் ஆண்டறிக்கையில் சுட்டிக்காட்டினார்.

அடுத்ததாக துணைத்தலைவர் பொன்வண்ணன் சங்கத்தின் 'குருதட்சணை திட்டம் குறித்து விளக்கினார். அடுத்ததாக மூத்த கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது. பி.யூ.சின்னப்பாவின் மருமகளுக்கு ஒரு லட்சம் மற்றும் கொல்லங்குடி கருப்பாயி, ஜெமினி ராஜேஸ்வரி, டி.வி சேகர் போன்றகளுக்கு நிதி உதவி வழங்கப்பட்டது.

அடுத்ததாக சங்கத்தின் செயலாளர் விஷால் பேசினார். அவர் பேசியபோது, 'நடிகர் சங்கத்திற்கு என கட்டப்படவுள்ள புதிய கட்டிடம் குறித்து விவரித்தார். புதிய கட்டிடத்தில் 1000 பேர் அமரும் வசதி கொண்ட ஆடிட்டோரியம், திருமண மண்டபங்கள், பிரிவியூ திரையரங்கம், சங்கத்தின் அலுவலகம், உடற்பயிற்சிக்கூடம், கார் பார்க்கிங் ஆகியவை கொண்ட கட்டிடமாக அமையும் என்றும் இதற்கு சுமார் ரூ.26 கோடி செலவாகும் என்றும் இந்த தொகையை ஸ்டார் கிரிக்கெட், திரைப்படம், தொலைக்காட்சி சீரியல் ஆகியவற்றின் மூலம் திரட்ட திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.

இந்த விழாவுக்கு உலக நாயகன் கமல்ஹாசன் அமெரிக்காவில் இருந்து கூறிய ஸ்கைப் வாழ்த்து செய்தியும் ஒளிபரப்பப்பட்டது.

பின்னர் பொருளாளர் கார்த்தி பேசியபோது, "இது கனவிலும் நினைத்துப் பார்க்காத மேடை இதை என் பெரிய குடும்பமாக உணர்கிறேன். இனி நாடக நடிகர்கள் எதற்கும் யாரிடமும் கையேந்த விட மாட்டோம். மருத்துவ, கல்வி, ஓய்வூதியத் திட்டங்கள் பலன் தரும். முந்தைய நிர்வாகம் செய்த குளறுபடிகள், தவறுகள் பற்றி புகார் செய்ய இருக்கிறோம்' என்று கூறினார்.

இறுதியில் தலைவர் நாசர் பேசியபோது, " இப்படி ஒரு பெரிய மாற்றத்துக்காக எங்கள் மேல் நம்பிக்கை வைத்ததற்கு நன்றி. நம்பிக்கையைவிட அன்பு காட்டியது அதிகம். அதற்கும் நன்றி.
அவச்சொல். அவதூறு , வாக்குவாதம் இல்லாமல் நடக்கும் முதல் கூட்டம் இது. இப்படிக் கல்யாண வைபவம் போல ஒவ்வொரு கூட்டமும் கொண்டாட்டமாக நடக்கும். எங்களை நம்புங்கள் அனைவரும் இணைவோம். நல்லதே நடக்கும்' என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நடிகை ஹன்சிகா தனது செலவில் உணவு வழங்கினார். அவருக்கு சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

More News

விஜய்யின் 'தெறி' டிரைலர் விமர்சனம்

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' படத்தின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாடல்கள் வெளியீடு மற்றும் டிரைலர் வெளியீடு நேற்று சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது...

'தெறி' ஆடியோவுக்கு சமந்தா ஏன் வரவில்லை?

இளையதளபதியின் 'தெறி' ஆடியோ விழாவில் கிட்டத்தட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டிருந்தாலும் படத்தின் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள நாயகி சமந்தா....

ஏப்ரல் 1 முதல் சுந்தர் சியின் அடுத்த படம் ரிலீஸ்

பிரபல இயக்குனர் சுந்தர் சி தயாரித்து, இயக்கி, நடித்த 'அரண்மனை 2' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்....

கபடி வீரருக்கு ஜோடியாகும் அமலாபால்

திருமணத்திற்கு பின்னர் ஒருசில நல்ல கேரக்டர்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார் நடிகை அமலாபால். பாண்டியராஜ் இயக்கத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக 'பசங்க 2' மற்றும் தனுஷின் 'அம்மா கணக்கு' ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ள அமலாபால்...

தனுஷ், சிம்பு நாயகிக்கு இன்று பிறந்தநாள்

தமிழ் சினிமாவில் இரு துருவங்களாக இருக்கும் தனுஷ் மற்றும் சிம்பு ஆகிய இருவருக்கும் ஒரே நேரத்தில் ஜோடியாக நடித்து அறிமுகமானவர் நடிகை ரிச்சா...