close
Choose your channels

தனுஷின் 'கேப்டன் மில்லர்' படத்தில் பிரபல ஹீரோ இணைகிறாரா?

Thursday, February 23, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்து வரும் ’கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் பிரபல ஹீரோ மற்றும் இயக்குனர் ஒருவர் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’கேப்டன் மில்லர்’. இந்த படத்தில் ஏற்கனவே கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் நடித்து வரும் நிலையில் நாயகியாக பிரியங்கா மோகன் நடித்து வருகிறார் என்பதும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தில் பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் ’உரியடி’ விஜயகுமார் இணைய இருப்பதாகவும் இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. ’உரியடி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் ரசிகரின் கவனத்தை பெற்ற விஜயகுமார் அதன்பிறகு ’உரியடி 2’ என்ற படத்திலும் நடித்தார் என்பது தெரிந்ததே.

இந்நிலையில் அவர் தனுசுடன் ’கேப்டன் மில்லர்’ படத்தில் நடிப்பது உறுதி செய்யப்பட்டால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment