close
Choose your channels

இதை முதலில் செய்வாரா விஜய்? பிரபல இயக்குனர் கேள்வி..!

Thursday, July 6, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் விஜய் அரசியலுக்கு வர இருப்பதாக கூறப்படும் நிலையில் அவரது அரசியல் வருகை குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரையுலகினர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல இயக்குனர் அமீர், விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன் இதை முதலில் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறிய போது ’தலைவர்கள் யாரும் வானத்திலிருந்து குதிப்பதில்லை, நம்மில் ஒருவர் தான் தலைவராக வருகிறார்கள்.. வாக்குக்கு பணம் வாங்கக்கூடாது என்று பெற்றோர்களிடம் சொல்ல வேண்டும் என்று சொல்வது மாதிரி, விஜய் தனது புதிய படத்திற்கு முதல் நாள் காட்சிக்கு 1500 ரூபாய் டிக்கெட் வாங்குவதும் நேர்மையற்ற செயல் தான் என்று சொல்ல வேண்டும்.

சமூகத்தை சரி செய்வதாக இருந்தால் எல்லாவற்றையும் செய்ய வேண்டும், மக்கள் ரொம்ப நாட்களாக தங்கள் வாழ்வியலை திரையரங்குகளில் அமைத்திருக்கிறார்கள், அதுதான் பெரிய சாபக்கேடு என்று தெரிவித்துள்ளார்.

இயக்குனர் அமீரின் இந்த கருத்துக்கு விஜய் தரப்பிலிருந்து என்ன பதில் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment