close
Choose your channels

பிரபல தமிழ் ஹீரோவுக்கு திருமணம்: மணப்பெண் யார் தெரியுமா?

Tuesday, June 28, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தமிழ் ஹீரோவும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களின் ஒருவருமான ஹரிஷ் கல்யாண் திருமணம் விரைவில் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

’சிந்து சமவெளி’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின் ஒரு சில படங்களில் நடித்தவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். இதனை அடுத்து அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் ’பியார் பிரேமா காதல்’ ’இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’ ’தாராள பிரபு’ உட்பட ஒரு சில படங்களில் நடித்தார். தற்போது அவர் ’நூறு கோடி வானவில்’, சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஒரு படம் என இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ஹரீஸ் கல்யாணின் பெற்றோர் அவருக்கு பெண் பார்க்கும் படலத்தை தொடங்கியுள்ளதாகவும் இன்னும் ஓரிரு மாதங்களில் அவரது திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

தனக்கு பொருத்தமான பெண் தேடும் பொறுப்பை ஹரிஷ் கல்யாண் தனது பெற்றோரிடம் முழுமையாக ஒப்படைத்து விட்டதாகவும் வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் ஹரிஷ் திருமணத்தை நடத்த அவரது பெற்றோர்கள் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment