பிரபல பாடலாசிரியர் மகள் தூக்கில் தொங்கி தற்கொலை: என்ன காரணம்?

  • IndiaGlitz, [Saturday,September 10 2022]

பிரபல திரைப்பட பாடலாசிரியர் மகள் தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘பொன்னியின் செல்வன்’ ’பிசாசு’ ’சார்பட்டா பரம்பரை’ உள்பட பல திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியவர் பிரபல தமிழ் திரைப்பட பாடலாசிரியர் கபிலன். இவரது மகள் தூரிகை திடீரென நேற்று இரவு தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 28.

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டதாகவும், இது குறித்து விசாரணை செய்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பெற்றோர்கள் திருமணத்திற்கு வற்புறுத்தியதால் தூரிகை தற்கொலை செய்து கொண்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

தற்கொலை செய்து கொண்ட தூரிகை பிரபல ஆங்கில ஊடகத்தில் கட்டுரைகள் எழுதி வந்தார் என்பதும் அவரே இணையத்தில் ஒரு சொந்த இதழை நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி பல திரைப்படங்களில் அவர் ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல தமிழ் திரைப்பட பாடலாசிரியர் கபிலன் அவர்களின் மகள் தூரிகை தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

More News

மணமகனின் கையில் இருந்த தாலியை பறித்து மணமகளுக்கு கட்ட முயன்ற வாலிபர்: அதிர்ச்சி சம்பவம்

சென்னை தண்டையார்பேட்டையில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் கடைசி நேரத்தில் தாலி கட்டும்போது மணமகனிடம் தாலியை பறித்த வாலிபர் ஒருவர் மணமகளுக்கு தாலி கட்ட

ஷங்கரின் படத்தில் 2வது முறையாக இணைந்த பிரபல நடிகர்: அதிகாரபூர்வ அறிவிப்பு

 பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய ஒரு திரைப்படத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டும் நடித்த பிரபல நடிகர் ஒருவர் அவர் இயக்கி வரும் அடுத்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க இணைந்து

உலகின் முதல் வித்தியாசமான தொழிலை தொடங்கிய அர்ஜூன் மகள்: வாழ்த்து கூறிய பிரபலம் யார் தெரியுமா?

உலகில் இதுவரை யாருமே செய்யாத புதுவித பிசினஸை ஆக்சன் கிங் அர்ஜுன் மகள் தொடங்கியுள்ளதை அடுத்து அவருக்கு தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

உதயநிதிக்கு சிறப்பு விருந்து வைத்த கீர்த்தி சுரேஷ்: வைரல் புகைப்படங்கள்!

 நடிகரும் அரசியல்வாதியுமான உதயநிதிக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் சிறப்பு விருந்து வைத்த புகைப்படங்கள் அவரது சமூக வலைத்தளத்தில் பதிவாகியுள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

'வாழ்த்துக்கள், நீ கர்ப்பமா இருக்க.. சமந்தாவின் 'யசோதா' டீசர்

பிரபல நடிகை சமந்தா நடித்த 'யசோதா' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது.