கிராமப்புற ஏழை விவசாயிகள் மற்றும் கூலி தொழிலாளர்கள்களுக்கு  இலவச கான்கீரீட் வீடுகள்: முதல்வரின் திட்டத்தால் விவசாயிகள் மகிழ்ச்சி!

விவசாயிகள் மற்றும் விவசாய கூலி தொழிலாளர்களுக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டி தரப்படும் என்று முதலமைசர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதற்கு விவசாயிகள் மற்றும் விவசாய கூலித் தொழிலாளர்கள் முதலமைச்சருக்கு நன்றிகளை தெரிவித்து கொண்டுள்ளனர்.

ஏற்கனவே விவசாயிகள் நலன்கள் மீது அக்கறை கொண்ட முதலவர், புயல் மற்றும் வெள்ளம் நேரத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளை நேரில் சென்று சந்தித்து, அவர்களுக்கும் நஷ்டஈடும் உடனே அறிவித்தார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசு முன்னாள் முதலமைச்சர் ஜெயலிதாவின் விஷன் 2023யை பின்பற்றி தமிழகத்தில் முதலீடுகளை ஈர்த்து சமூக பாதுகாப்பு மற்றும் பொருளாதார மேம்பாடிற்கான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. விவசாய துறை மேம்பாடிற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனிக்கவனம் செலுத்தி, குடிமராமத்து திட்டத்தை செயல்படுத்தினார். இதனால், அமோக விளைச்சல் ஏற்பட்டு, தமிழக அரசு விவசாயிகளிடம் இருந்து சுமார் 32 லட்சம் மெட்ரிக் டன் நெல்களை கொள்முதல் செய்துள்ளது. நாட்டிலேயே அதிக நெல் கொள்முதல் செய்த மாநிலம் என்ற பெருமையை தமிழக எட்டியுள்ளது.

நிவர் மற்றும் புரவி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இடு பொருள் நிவாரணத்தை உயர்த்தி வழங்குமாறும் அதற்காக 600 கோடி ரூபாய் ஒதுக்கியும் முதலமைச்சர் உத்தரவிட்டார். இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் பிரச்சாரத்தில் உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விவசாயிகள், விசாய தொழிலாளர்களுக்கு கான்கீரீட் வீடுகள் கட்டி தரப்படும் என்று தெரிவித்தார். இதற்கு விவசாய கூலித் தொழிலாளர்கள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

நானும் ஒரு விவசாயி என்பதால் விவசாயிகளின் கஷ்டதுயரங்களை நன்கு அறிந்தவன் என்று தெரிவித்து வரும் முதலமைச்சர் விவசாயிகள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் தற்போது விவசாயத் துறை வெற்றி நடை போடுவதாவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மேலும், விவசாய தொழிலாளர்கள் முதலமைச்சரின் கான்கீரீட் வீடு திட்டத்திற்கு தங்களது நன்றிகளையும் தெரிவித்துள்ளனர்.

More News

அருண்விஜய்யின் 'சினம்' சென்சார் தகவல்!

அருண் நடிப்பில் ஜிஎன் குமரவேலன் இயக்கிய 'சினம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். 

சிவகார்த்திகேயன் படத்தில் பாட்டு பாடிய பிரபல இசையமைப்பாளர்: ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது 'டாக்டர்' மற்றும் 'அயலான்' ஆகிய இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ளார் என்பதும் இந்த படங்கள் அடுத்தடுத்து இந்த ஆண்டே ரிலீஸ் ஆக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 

ஆரியுடன் இணைந்து திரைப்படம், பிடித்த போட்டியாளர்: பாலாஜியின் முதல் லைவ் பேட்டி

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ரன்னரான பாலாஜி முருகதாஸ் விரைவில் ரசிகர்களை சந்தித்து லைவ்வில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளிப்பேன் என்று கூறியிருந்தார். அந்த வகையில் தற்போது அவர் ரசிகர்களின் கேள்விக்கு

மயிலும் நாங்களே, புலியும் நாங்களே: பிகில்' நடிகையின் மாஸ் குடியரசு தின லுக்!

தளபதி விஜய் நடித்த பிகில்' படத்தில் நடித்த நடிகை ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆவேசமாக பதிவு செய்துள்ள குடியரசு தின சிறப்பு புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன 

எதிர்க்கட்சி கார்ப்பரேட் கம்பெனி போல செயல்படுகிறது- தமிழக முதல்வர் காட்டம்!

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்து இருக்கிறது. இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி