பூணூலை குறைசொல்ல கமலுக்கு தகுதி இருக்கிறதா? பிராமணர் சங்கம் கேள்வி

  • IndiaGlitz, [Friday,July 27 2018]

உலக நாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் டுவிட்டரில் ரசிகர்கள் மற்றும் தொண்டர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது ஒரு ரசிகர் கமல்ஹாசனிடம், 'நீங்கள் படித்த நூலில் உங்களை மிகவும் பாதிப்பை உண்டாக்கிய நூல் எது? என்ற கேள்வியை எழுப்பினார். இந்த கேள்விக்கு பதிலளித்த கமல், 'நான் தவிர்த்த நூல் ஒன்று இருக்கிறது, அது என்னை மிகவும் பாதித்த நூல், “பூணூல் “ அதனாலேயே அதை தவிர்த்தேன்' என்று கூறினார். ரசிகரின் கேள்விக்கும் கமலின் இந்த பதிலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையே என்ற கருத்து பரவலாக இருந்தது.

இந்த நிலையில் பூணூல் குறித்து கமல்ஹாசன் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்கு தமிழ்நாடு பிராமணர் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. பூணூல் குறித்து கீழ்த்தரமாக விமர்சனம் செய்த பிராமண குல துரோகி நடிகர் கமல்ஹாசனை வன்மையாக கண்டிக்கின்றோம் என்று கூறிய பிராமணர் சங்கம், பிராமண மக்களின் புனித அடையாள சின்னத்தை கீழ்த்தரமாக விமர்சித்தது கமலின் வக்ர புத்தியை காட்டுகிறது என்றும், பூணூலை குறைசொல்ல கமலுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று நடிகர் கமலுக்கு தமிழ்நாடு பிராமணர் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

பிராமணர்கள் சங்கத்தின் இந்த கண்டனத்திற்கு கமல்ஹாசன் என்ன பதில் சொல்ல போகின்றார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 

More News

பிரபல சின்னத்திரை தொகுப்பாளினிக்கு ஆண் குழந்தை

சன் நெட்வொர்க்கின் ஒரு சேனலில் ஆர்ஜேவாக பணிபுரிந்து கொண்டிருந்த அஞ்சனா கடந்த 2016ஆம் ஆண்டு பிரபுசாலமன் இயக்கிய 'கயல்' படத்தில் அற்முகமாகிய நடிகர் சந்திரனை திருமணம் செய்தார்.

9வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்த சென்னை ஐ.டி இளம்பெண்

நேற்று சென்னை ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் இளம்பெண் ஒருவர் 9வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்

சிவாவின் 'தமிழ்ப்படம் 2' சென்சார் தகவல்

கடந்த சில வாரங்களாகவே இணையதளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் திரைப்படம்  'தமிழ்ப்படம் 2'.

கைகொடுக்காத கட்டிப்பிடி வைத்தியம்: செண்ட்ராயன் பரிதாபம்

பிக்பாஸ் வீட்டின் தலைமை பொறுப்பு நேற்றுடன் நித்யாவுக்கு முடிவுக்கு வந்தது. இதுகுறித்த அறிவிப்பு வந்தவுடன் நித்யா மிகுந்த சந்தோஷம் அடைந்தார்

பேப்பர் படித்து கொண்டே பஸ் ஓட்டும் சென்னை மாநகர பேருந்து டிரைவர்

சென்னையை சேர்ந்த மாநகர் பேருந்தை ஓட்டும் டிரைவர் ஒரு செய்தித்தாளை படித்து கொண்டே பேருந்தை ஓட்டிய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.