ரஜினி அரசியல் குறித்து கருத்து சொன்ன முதல்வர் பழனிசாமி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா? என்ற பலவருட கேள்விக்கு நேற்று விடை கிடைத்தது என்பதும் டிசம்பர் 31ஆம் தேதி தான் அரசியல் குறித்த அறிவிப்பை வெளியிட இருப்பதாகவும், ஜனவரி மாதம் கட்சி தொடங்க இருப்பதாகவும் அறிவித்தார்

மேலும் அர்ஜுனா மூர்த்தி மற்றும் தமிழருவி மணியன் ஆகிய இருவரை நியமனம் செய்த ரஜினிகாந்த் அவர்கள் இருவரும் ரஜினி மக்கள் மன்றத்தை அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வார்கள் என்றும் தெரிவித்தார்

இந்த நிலையில் ரஜினியின் அரசியல் வருகை குறித்து அதிமுக திமுக உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வந்தனர். குறிப்பாக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் ரஜினியின் அரசியல் வருகைக்கு வாழ்த்து கூறியதோடு தேவைப்பட்டால் ரஜினி கட்சியுடன் கூட்டணி வைப்போம்’ என்று தெரிவித்திருந்தார்

இந்த நிலையில் தற்போது முதல் முறையாக ரஜினியின் அரசியல் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தனது கருத்தை கூறியுள்ளார். ’நடிகர் ரஜினி கட்சியை பதிவு செய்த பின்பு அதைப் பற்றி பேசலாம்’ என்று அவர் ரஜினி அரசியல் குறித்த கேள்விக்கு பதில் அளித்தார்

More News

நடராஜன் இந்திய அணிக்கு கிடைத்த சொத்து: வெற்றிக்கு பின் விராத் பேட்டி!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் இன்று நடைபெற்ற முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

நிதி முறைகேட்டு வழக்கில் அதிபர் டிரம்பின் மகளா???

அமெரிக்க அதிபராக இருந்துவரும் டொனால்ட் டிரம்ப் வரும் ஜனவரி மாதம் வெள்ளை மாளிகையை விட்டு காலி செய்யப் போகிறார்.

தமிழர்கள் திரைமோகத்தில் இருக்கும் முட்டாள்கள்: ரஜினி அரசியல் குறித்து முன்னாள் நீதிபதி!

தமிழர்கள் அறிவார்ந்த மக்களாக இருந்தாலும் திரைப்பட மோகத்தில் இருக்கும் முட்டாள்களாக இருக்கிறார்கள் என்று ரஜினிகாந்த் அரசியல் குறித்து முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி மார்க்கண்டேய

ரஜினி கட்சியில் இணைகிறாரா பிக்பாஸ் வேல்முருகன்? அவரே அளித்த விளக்கம்

பிரபல பாடகரும், பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்களில் ஒருவரான வேல்முருகன் சமீபத்தில் ரஜினியுடன் இணைந்த ஒரு புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து இருந்தார்.

தவறான தகவலை பரப்ப வேண்டாம்: ரஜினி கட்சி நிர்வாகி குறித்து தயாநிதி மாறன் விளக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று தான் அரசியலுக்கு வருவதை உறுதி செய்ததோடு டிசம்பர் 31ஆம் தேதி அரசியல் கட்சி குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும், ஜனவரியில் கட்சி தொடங்கப்படும்