மண்ணின் மைந்தன் நடராஜனுக்கு வாழ்த்துக்கள்: முதல்வர் பழனிசாமி டுவீட்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே.

இன்றைய போட்டியில் முதல் முதலாக சர்வதேச போட்டியில் விளையாடிய சேலத்தை சேர்ந்த நடராஜன் அபாரமாக பந்துவீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் சர்வதேச போட்டியிலேயே 2 விக்கெட்டுகளை வீழ்த்திய நடராஜனுக்கு தமிழகத்தில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. அரசியல் தலைவர்கள் திரையுலக பிரபலங்கள் உள்பட பலர் தங்களது சமூக வலைதளங்களில் நடராஜனுக்கு பாராட்டுகளை குவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் நடராஜனுக்கு தனது பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து தனது டுவிட்டரில், ‘இந்தியாவிற்கான தன் முதல் போட்டியிலேயே, சவால்கள் நிறைந்த சூழ்நிலையிலும் தன் முத்திரையைப் பதித்து, தன் சர்வதேசப் பயணத்தை வெற்றியுடன் துவக்கியிருக்கும் நம் மண்ணின் மைந்தன் நடராஜனுக்கு வெற்றிகள் மென்மேலும் வந்து சேர வாழ்த்துகிறேன்’ என்று கூறியுள்ளார்.
 

More News

'மங்காத்தா' படத்தின் அன்சீன் புகைப்படம்: வைரலாக்கும் அஜீத் ரசிகர்கள்!

தல அஜித் நடித்த மிகப்பெரிய வெற்றிப் படங்களில் ஒன்று 'மங்காத்தா' என்பதும் இந்த படம் அவருடைய ஐம்பதாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. அஜீத்தின் திரையுலக வரலாற்றில் ஒரு

தமிழக வீரர் நடராஜன் அறிமுகப்போட்டி அசத்தல் ஆட்டம்… இந்திய அணி ஆறுதல் வெற்றி!!!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3 ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

சூர்யா நடிப்புக்கு பாராட்டு தெரிவித்த டேவிட் வார்னர்: வைரலாகும் வீடியோ!

தமிழ் சினிமாவில் மிகவும் சிறப்பாக நடிக்க தெரிந்த நடிகர்கள், ஒரு கேரக்டரில் நடிக்க ஆரம்பித்து விட்டால் அந்த கேரக்டராகவே மாறி விடுவார் என்ற பெயரை பெற்ற நடிகர்கள் ஒரு சிலர் மட்டுமே உள்ளனர்.

பிக்பாஸில் இருந்து வெளியேறிய நடிகைக்கு 4 கள்ளக்காதலர்களா? கணவர் தரும் அதிர்ச்சி தகவல்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெளியேறிய நடிகை ஒருவருக்கு நான்கு கள்ளக்காதலர்கள் இருந்ததாக அவரது கணவரே புகார் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

'மாஸ்டர்' ரிலீஸ் குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ: விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் ஓடிடியில் வெளியாகாது என்றும் திரையரங்குகளில் தான் வெளியாகும் என்றும் சமீபத்தில் தயாரிப்பாளர் உறுதிபடக் கூறி உள்ள நிலையில்