தமிழகத்தில் கனமழை: தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

  • IndiaGlitz, [Thursday,October 04 2018]

தமிழகத்தில் வரும் 7ஆம் தேதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் கொடுத்துள்ள நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் என்ன சொல்கிறார் என்பதை பார்ப்போம்

தமிழகம் முழுவதும் இன்றும் நாளையும் நல்ல மழை பெய்யும். சென்னையை பொறுத்தவரையில் மழை விட்டுவிட்டு பெய்யும். மேலும் மன்னார் வளைகுடாவில் இருந்து இலங்கை கடற்கரை வரை நீடிக்கும் மேலடுக்கு சுழற்சியால் வட தமிழகத்தில் நல்ல மழை பெய்ய வாய்ப்பு அதிகம். இன்றும் நாளையும் தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் என்று கூற முடியாது என்றாலும் திருவள்ளூர் முதல் தூத்துக்குடி வரை நாளையும், மேற்கு தமிழக மாவட்டங்களான கோவை, ஈரோடு , நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களிலும் நல்ல மழை பெய்யும்

அதேபோல் ராமநாதபுரம், மதுரை ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

More News

பிரதமர், முதல்வருக்கு கடிதம் எழுதிவிட்டு ஃபேஸ்புக் நேரலையில் தற்கொலை முயற்சி செய்த இளம்பெண்

கர்நாடகாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பிரதமர் மற்றும் முதல்வருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு ஃபேஸ்புக் நேரலையில் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு இளம்பெண் முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஜோதிகாவின் 'காற்றின் மொழி' ரிலீஸ் தேதி திடீர் மாற்றம்

ஜோதிகா நடிப்பில் இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் உருவான 'காற்றின் மொழி' திரைப்படம் வரும் ஆயுதபூஜை திருநாளில் வெளியிட திட்டமிடப்பட்டது

தமிழகத்திற்கு வானிலை மையம் ரெட் அலர்ட் கொடுத்த தேதி

கேரளாவில் கடந்த மாதம் வானிலை மையம் ரெட் அலர்ட் கொடுத்த நிலையில் அங்கு வரலாறு காணாத கனமழை, பெருவெள்ளம் ஏற்பட்டு கடவுளின் தேசம் என்று கூறப்படும் அம்மாநிலமே சிறுசிறு தீவுகளாக மாறியது.

தொடரும் முதல் காட்சி ரத்து படங்கள்

கோலிவுட் திரையுலகில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை திரைப்படங்கள் ரிலீசாகி கொண்டிருந்த நிலையில் தற்போது அது வியாழக்கிழமையாக மாறிவிட்டது

'96' திரைப்படம்: த்ரிஷாவிடம் விஜய்சேதுபதி வைத்த வித்தியாசமான கோரிக்கை

விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் உலகம் முழுவதும் இன்று வெளியாகவுள்ள திரைப்படம் '96'. இந்த படத்தின் பத்திரிகையாளர்கள் காட்சி கடந்த திங்கட்கிழமை திரையிடப்பட்டபோதே