close
Choose your channels

பிரபல சீரியல் நடிகைக்கு விபத்து.. அதிர்ச்சி வீடியோ

Tuesday, January 10, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல சீரியல் நடிகை விபத்தில் சிக்கிய நிலையில் காயத்துடன் மருத்துவமனையில் இருக்கும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

சன் டிவியில் ஒளிபரப்பான ’இனியா’ என்ற சீரியலில் நடித்த நடிகை ஆலியா மானசா அதன் பிறகு ’ராஜா ராணி’ சீரியலில் வெண்பா என்ற கேரக்டரில் நடித்து ஒட்டுமொத்த சின்னத்திரை ரசிகர்களை கவர்ந்தார் என்பது தெரிந்ததே.

மேலும் அந்த சீரியலில் நாயகனாக நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சமூக வலைதளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் ஆலியா மானசா அவ்வப்போது தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்கள் வீடியோக்களை பதிவு செய்து வருவார். அதுமட்டுமின்றி தீவிரமாக உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைக்கும் வீடியோவையும் அவர் பதிவு செய்து வந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் அவருக்கு எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு காலில் அடி பட்டு விட்டதாகவும் இதனையடுத்து மருத்துவமனையில் இருப்பதாகவும் அவர் உருக்கமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். என்னுடைய நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் எனக்காக பிரார்த்தனை செய்து கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார். மேலும் இந்த இக்கட்டான நேரத்தில் தனது கணவர் மீது மிகுந்த அன்பு செலுத்தி தன்னை கவனித்துக் கொள்கிறார் என்றும் அவருக்கு தனது நன்றி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment