close
Choose your channels

நீ இல்லாமல் ஒரு திருமண நாள்.. மறைந்த கணவர் குறித்து உருக்கமான பதிவு செய்த சீரியல் நடிகை..!

Monday, May 27, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கணவர் மறைந்த பின்னர் இன்று இரண்டாவது திருமண நாளை கொண்டாடிய சீரியல் நடிகை ’நீ இல்லாமல் நான் ஒரு திருமண நாளை கொண்டாடி கொண்டிருக்கிறேன்’ என்று உருக்கமாக பதிவு செய்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ’பாரதி கண்ணம்மா’ சன் டிவியில் ஒளிபரப்பான ’நாதஸ்வரம்’ ’வாணி ராணி’ உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தவர் நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா. இவர் அரவிந்த் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திடீரென அரவிந்த் மாரடைப்பால் காலமானார்.

திருமணம் ஆகி ஒரு வருடமே ஆன நிலையில் அரவிந்த் மரணம் அடைந்தது ஸ்ருதி சண்முகப்பிரியாவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் இன்று அவர் தங்களது இரண்டாவது திருமண நாளை முன்னிட்டு உருக்கமாக இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

நீ இல்லாமல் ஒரு திருமண நாளை கொண்டாடிக் கொண்டிருக்கிறேன், நீ என் அருகில் இருப்பதாக தான் நான் நினைக்கிறேன். இந்த உலகம் என்னை தடுக்க முடியாது, முன்பை விட நான் இப்போது உன்னை அதிகம் நேசிக்கிறேன், நீ இல்லாமல் நான் திருமண நாளை கொண்டாடுவதாக உலகம் நினைக்கலாம், ஆனால் நீ எப்போதுமே என் அருகில் தான் இருக்கிறாய்.

நான் அழுதால் உனக்கு பிடிக்காது என்பதால் தான் நான் அழுவது இல்லை, இந்த நாளில் உனக்கு பிடித்த சில விஷயங்களை செய்ய போகிறேன், நாம் வாழ ஆசைப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து காட்டி உன்னை பெருமைப்படுத்துவேன், உன்னை சந்திக்க வாழ்வின் இன்னொரு பக்கத்தில் காத்திருக்கிறேன்’ என்று உருக்கமாக பதிவு செய்துள்ளார். இந்த பதிவுக்கு ஆறுதல் கூறும் வகையில் ஏராளமான கமெண்ட்ஸ்கள் பதிவாகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.