ஐ.என்.எஸ் போர்க்கப்பலில் அரசியல் ஆலோசனை செய்யும் அதிமுக எம்.எல்.ஏக்கள்

  • IndiaGlitz, [Tuesday,April 18 2017]

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்கள் அனைவரும் சென்னை வரும்படி அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பு அரசியல் குறித்து முக்கிய முடிவு எடுப்பதற்காக என ஊகிக்கப்பட்ட நிலையில் இன்று அனைத்து எம்.எல்.ஏக்களும் ஐ.என்.எஸ் போர்க்கப்பலில் பயணம் செய்கின்றனர். இதற்காகவே எம்.எல்.ஏக்கள் வரவழைக்கப்பட்டதாக தெரிகிறது.
இந்த பயணத்தின்போது அதிமுக சசிகலா அணி மற்றும் ஓபிஎஸ் அணி இணைவது குறித்து அனைத்து எம்.எல்.ஏக்களிடம் கருத்து கேட்க மூத்த அமைச்சர்கள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. சென்னை துறைமுகத்திற்கு வந்துள்ள இந்த போர்க்கப்பலில் ஜெயக்குமார், விஜயபாஸ்கர், நிலோபர் கபில் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் உள்பட 122 எம்.எல்.ஏக்களும் பயணம் செய்யவுள்ளனர்.
சென்னை துறைமுகத்துக்கு தற்போது வந்துள்ள இந்த கப்பல், நவீன தொழில்நுட்பத்தில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இந்தியாவின் 50 சக்திவாய்ந்த பட்டியலில் ரஜினி-கமல்

இந்தியா டுடே ஊடக நிறுவனம் வெளியிட்டுள்ள இந்தியாவின் சக்தி வாய்ந்த 50 நபர்களின் பட்டியல் பட்டியலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

தனுஷின் திரையுலக வாழ்க்கையில் இதுதான் காஸ்ட்லி படம்

தனுஷ் இயக்கிய 'ப.பாண்டி' திரைப்படம் பாக்ஸ் ஆபீசில் ஹிட்டாகியுள்ள நிலையில் அவர் நடித்து வரும் இன்னொரு படமான 'வடசென்னை' திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இரண்டாவது கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.

விஜய்சேதுபதியை 'மாமனிதன்' ஆக்கிய யுவன்ஷங்கர் ராஜா

பிரபல இசையமைப்பாளரும் இசைஞானி இளையராஜாவின் இசை வாரீசுமான யுவன்சங்கர் ராஜா தற்போது நயன்தாரா நடித்து வரும் 'கொலையுதிர்க்காலம்' என்ற படத்தை தயாரித்து வருகிறார்.

மீண்டும் புதிய முதல்வர்? சென்னையில் குவியும் அதிமுக எம்.எல்.ஏக்களால் பரபரப்பு

கடந்த சில நாட்களாக பிரேக்கிங் நியூஸ் இல்லாமல் நிம்மதியாக இருந்த தமிழக மக்களை மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் தற்போது பிரேக்கிங் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

'குவீனை' பட்டர்பிளையாக மாற்றிய கமல் நண்பர்

பாலிவுட்டில் கங்கனா ரனாவத் நடித்த சூப்பர் ஹிட் படமான 'குவீன்' படம் தமிழ் உள்பட தென்னிந்திய மொழிகளில் ரீமேக் ஆகவுள்ளதாகவும், தமிழில் கங்கனா நடித்த கேரக்டரில் தமன்னா நடிக்கவுள்ளதாகவும் சமீபத்தில் செய்தி வெளிவந்தது.