close
Choose your channels

விஜய்சேதுபதியை 'மாமனிதன்' ஆக்கிய யுவன்ஷங்கர் ராஜா

Tuesday, April 18, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இசையமைப்பாளரும் இசைஞானி இளையராஜாவின் இசை வாரீசுமான யுவன்சங்கர் ராஜா தற்போது நயன்தாரா நடித்து வரும் 'கொலையுதிர்க்காலம்' என்ற படத்தை தயாரித்து வருகிறார். சக்ரி டோலட்டி இயக்கத்தில் இந்த படம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது.

இந்த நிலையில் சீனுராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் படத்தை யுவன்ஷங்கர் ராஜா தயாரிப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன் பார்த்தோம். இந்த படத்தின் டைட்டில் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்திற்கு 'மாமனிதன்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இந்த படத்தில் இளையராஜா மற்றும் யுவன்ஷங்கர் ராஜா இணைந்து இசையமைக்கவுள்ளதாக கூறப்படினும் இந்த செய்தியை படக்குழுவினர்கள் இன்னும் உறுதி செய்யவில்லை

தர்மதுரை' வெற்றி படத்திற்கு பின்னர் மீண்டும் சீனுராமசாமி-விஜய்சேதுபதி-யுவன்ஷங்கர் ராஜா கூட்டணி இணைந்துள்ளதால் மேலும் ஒரு தரமான படம் ரசிகர்களுக்கு விருந்தாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.