தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு.....! எதெற்கெல்லாம் தடை...?

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களுக்கும், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, இன்னும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு 05-07-2021- ஆண்டு  முடிவடைய இருப்பதால், தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

நம் மாநிலத்தில் பல மாவட்டங்களில் கொரோனா தொற்று குறைந்து வந்தாலும், ஒருசில மாவட்டங்களில் பாதிப்பு ஏறுமுகமாகவும், இறங்குமுகமாகவும் இருந்து வருகிறது.  அந்த வகையில் மாவட்டங்களை 3 வகைகளாக பிரிக்கப்பட்டு, அரசு தளர்வுகளை அறிவித்து வந்தது.  முதல் வகையில் 11 மாவட்டங்கள், இரண்டாம் வகையில் 23 மாவட்டங்கள், மூன்றாம் வகையில் 4 மாவட்டங்கள் என பிரிக்கப்பட்டுள்ளது. முதல் வகையில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களான கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் தாக்கம் அதிகமுள்ளதால், குறைவான தளர்வுகளே அறிவிக்கப்பட்டு இருந்தன. இந்தநிலையில் தற்போது தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களுக்கும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மாவட்டங்களுக்கு இடையில் பயணிக்க இ-பாஸ் மற்றும்  இ-பதிவு முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

எதற்கெல்லாம் அனுமதி?

ஹோட்டல்களில் காலை 6 மணிமுதல் இரவு 8 மணிவரை, 50% இருக்கைகளில் அமர்ந்து  உணவருந்தலாம்.

முன்னமே அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், இரவு 8 மணி வரை அனுமதிக்கப்பட்ட கடைகள்  எப்போதும் போலவே செயல்படும்.

50% வாடிக்கையாளர்களுடன், தேநீர் கடைகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது

அரசு மற்றும் தனியார் பொருட்காட்சிகள்  நடைபெற அனுமதி

உடற்பயிற்சிக் கூடங்கள் மற்றும் யோகா மையங்கள் 50% நபர்களுடன் இயங்க அனுமதி.

50% வாடிக்கையாளர்களுடன் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, துணிக்கடைகள், நகைக்கடைகள்  செயல்பட அனுமதி.

அனைத்து மாவட்டங்களுக்கும்  பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அனைத்து வழிபாட்டுத் தலங்களும் வழிமுறைகளுடன் இயங்கலாம்.

மதுபானக்கடைகள் காலை 10 மணி - இரவு 8 மணி வரை இயங்கவும், வணிக வளாகங்கள் காலை 9 மணி - இரவு 8 மணி வரை இயக்கவும் அனுமதி.

திருமண நிகழ்வுகளில் 50 பேரும், இறுதிச்சடங்குகளில் 20 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும்.

கல்லூரிகளில் ஆராய்ச்சிக்காக படிப்பை தொடரும் மாணவர்கள், கல்விப்பணியை துவங்கலாம்.

எவைக்கெல்லாம் அனுமதி கிடையாது....?

அரசு, தனியார் பேருந்து போக்குவரத்து மாநிலங்களுக்கு இடையே செல்ல தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பள்ளிகள், கல்லூரிகள், உயிரியல் பூங்காக்கள்  மற்றும் மதுக்கூடங்கள் செயல்படத் தடை

சமுதாய நிகழ்வுகள், அரசியல் கூட்டங்கள், பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
 

More News

விஜய்யின் 'பீஸ்ட்' பட கெட்டப்: சன் பிக்சர்ஸ் வெளியிட்ட அட்டகாசமான புகைப்படங்கள்!

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'பீஸ்ட்'. இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற நிலையில் சமீபத்தில்

ஆசிரியர் ரூபத்தில் காமக்கொடூரன்....! புகாரளித்த மாணவிகள்....!

பாலியல் தொல்லை கொடுத்த கல்லூரியின் பேராசிரியர் மீது, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என

சூர்யாவை அடுத்து ஒளிப்பதிவு சட்டத்திருத்தத்திற்கு கார்த்தி கண்டனம்!

மத்திய அரசு கொண்டு வரவுள்ள புதிய ஒளிப்பதிவு வரைவு சட்டத்திற்கு திரையுலகினர் கடந்த சில நாட்களாக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் நேற்று சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில், சட்டம் என்பது கருத்து

சாதியை இழிவுபடுத்தி பேசிய டிக்டாக் சூர்யா...! இயக்கத்தினர் புகார்..காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்குமா...?

தங்களது சாதி குறித்து இழிவுபடுத்தி பேசியதாக, ரவுடி பேபி சூர்யா மீது "குறிஞ்சியர் மக்கள் ஜனநாயக இயக்கத்தினர்' காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

குறிப்பிட்ட மாவட்டங்களில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு....!

தமிழகத்தில், குறிப்பிட்ட 7 மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், விழுப்புரம், நீலகிரி, சிவகங்கை மற்றும் திருப்பத்தூர்