close
Choose your channels

விஜய்யின் 'பீஸ்ட்' பட கெட்டப்: சன் பிக்சர்ஸ் வெளியிட்ட அட்டகாசமான புகைப்படங்கள்!

Saturday, July 3, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘பீஸ்ட்’. இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற நிலையில் சமீபத்தில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இந்த படப்பிடிப்பில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருவதாகவும் இந்த படப்பிடிப்பு 20 நாட்கள் வரை நீடிக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ‘பீஸ்ட்’ படப்பிடிப்பின் இடையே பாடல் காட்சிக்கு நடனம் அமைத்து வரும் நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் விஜய், இயக்குனர் நெல்சன் உள்பட படக்குழுவினர் கலந்துக் கொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

பிறந்தநாள் கொண்டாடும் ஜானி மாஸ்டரை விஜய் கட்டிப்பிடித்து தனது வாழ்த்துக்களை கூறிய புகைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். இந்த புகைப்படத்தில் ‘பீஸ்ட்’ பட கெட்டப்புடன் விஜய் இருப்பதைப் பார்த்து இதுதான் விஜய்யின் ‘பீஸ்ட்’ கெட்டப்பா? என்றும் இந்த கெட்டப் அட்டகாசமாக இருப்பதாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் விஜய் இந்த கெட்டப்பில் மிகவும் ஸ்மார்ட்டாக இருப்பதாக இந்த புகைப்படங்களுக்கு கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார் என்பதும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் ரிலீஸாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.