டாப்ஸி நடிக்கும் ஸ்போர்ட்ஸ் படத்தின் டைட்டில் அறிவிப்பு

  • IndiaGlitz, [Friday,August 30 2019]

இந்திய திரையுலகில் தற்போது அதிக ஸ்போர்ட்ஸ் திரைப்படங்கள் உருவாகி வருகிறது. தமிழிலும் 'பிகில்' உள்பட ஒருசில ஸ்போர்ட்ஸ் திரைப்படங்கள் உருவாகி வரும் நிலையில் நடிகை டாப்ஸியின் அடுத்த படமும் ஒரு ஸ்போர்ட்ஸ் படம் என அறிவிக்கப்பட்டுள்ளது

ஒரு உண்மைக்கதையின் அடிப்படையில் தயாராகும் தடகள வீராங்கனை குறித்த கதையம்சம் கொண்ட படத்தில் டாப்சி நாயகியாக நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு 'ராஷ்மி ராக்கெட்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. தமிழ்ப்பட இயக்குனர் நந்தா பெரியசாமியின் கதையில் அனிருதா குஹாவின் திரைக்கதையில் உருவாகும் இந்த படத்தை ஆகார்ஷ் குரானா இயக்கவுள்ளார். இந்த படத்தின் அறிமுக வீடியோ ஒன்றை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள டாப்சி, இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

டாப்ஸி நடித்த 'மிஷன் மங்கள்' சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான நிலையில் தற்போது அவர் ஜெயம் ரவியின் அடுத்த படத்தில் நாயகியாக நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

பிக்பாஸ் வீட்டில் தனக்குத்தானே மகுடம் சூட்டிக்கொண்ட வனிதா! 

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் முழுவதும் கிராமத்து கலைகளின் டாஸ்க் காரணமாக சண்டை சச்சரவு இல்லாமல் பார்வையாளர்களை எண்டர்டெயின் செய்து

'நம்ம வீட்டு பிள்ளை' இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு

சிவகார்த்திகேயன் நடிப்பில் பாண்ட்ராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் 'நம்ம வீட்டுப் பிள்ளை' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான்: சீமான்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது ரஜினிக்கு அடுத்து திரையுலகில் முதலிடத்தில் விஜய் தான் இருப்பார்

உலகின் முதல் மருத்துவமனை எக்ஸ்பிரஸ் ரயில்: இந்தியன் ரயில்வே அசத்தல்

நோயாளிகள் இருக்கும் இடத்திற்கே சென்று அதிநவீன சிகிச்சையை அளிக்கும் உலகின் முதல் மருத்துவ எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முதல் இயங்கியது. லைஃப்லைன் எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படும்

நீ போயிட்டா நான் ஜாலியா இருப்பேன்! ஷெரினை கலாய்க்கும் தர்ஷன்

கடந்த சில வாரங்களில் அனேகமாக கவின், லாஸ்லியா இல்லாத புரமோஷன் வீடியோ இன்று வெளிவந்துள்ள முதல் வீடியோவாகத்தான் இருக்கும். ஆனாலும் இந்த புரமோவிலும் ரொமான்ஸ் தான் உள்ளது