ரூ.36 ஆயிரம் கரெண்ட் பில்: தனுஷ் நாயகியும் குற்றச்சாட்டு

  • IndiaGlitz, [Sunday,June 28 2020]

கரண்ட் தான் ஷாக் அடிக்கும் என்றால் தற்போது கரன்ட் பில்லும் மக்களைக் ஷாக் அடித்து வருவதை கடந்த சில நாட்களாக பார்த்து வருகிறோம்.

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக இரண்டு மாதங்களாக ரீடிங் எடுக்காமல் இருந்த மின் வாரியம், தற்போது மொத்தமாக நான்கு மாதங்களுக்கும் சேர்த்து ரீடிங் எடுப்பதால் கரண்ட் பில் அதிகபட்சமாக வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் ஏற்கனவே இது குறித்து நடிகர் பிரசன்னா மற்றும் நடிகை கார்த்திகா நாயர் ஆகியோர் தங்களுடைய சமூக வலைதளங்கள் மூலம் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்தனர். எப்போதும் இல்லாத வகையில் தற்போது கரண்ட் பில் மிகவும் அதிகமாக இருப்பதாகவும் இது என்ன கணக்கு என்றே புரிய வில்லை என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர். குறிப்பாக கார்த்திகா நாயரின் குற்றச்சாட்டுக்கு இன்னும் எந்த விதமான பதிலும் மும்பை மின் துறையிடம் இருந்து வரவில்லை என்று தெரிகிறது.

இந்த நிலையில் தற்போது தனுஷ் நடித்த ’ஆடுகளம்’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி, இன்று பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் நடிகை டாப்ஸியும் தன்னுடைய வீட்டிற்கு கரண்ட் பில் 36 ஆயிரம் வந்து இருப்பதாக குற்றம்சாட்டி உள்ளார். கடந்த மூன்று மாதங்களாக ஊரடங்கு அமலில் இருந்தது என்பதால் தன்னுடைய வீட்டில் எந்த விதமான புதிய எலக்ட்ரிக் பொருள்களும் வாங்கவில்லை என்றும் ஏற்கனவே தான் வாங்கிய பொருட்களை மட்டுமே பயன்படுத்தி வருவதாகவும் அவ்வாறு இருக்கும்போது திடீரென கரண்ட் பில் இவ்வளவு உயர்ந்தது ஏன் என்று எனக்கு தெரியவில்லை என்றும் மின்கட்டணம் எந்தவகையில் சார்ஜ் செய்யப்படுகிறது என்பது குறித்து விளக்க வேண்டும் என்றும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

டாப்ஸியின் இந்த டுவிட்டுக்கு பலர், தங்களுக்கும் இதே போல் அனுபவம் ஏற்பட்டு உள்ளதாக குறிப்பிட்டு வருகின்றனர். எனவே தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களில் உள்ள மின் வாரியங்கள் இதுகுறித்து விரிவான விளக்கம் அளித்து பொதுமக்களின் சந்தேகத்தை தீர்க்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

More News

மணமகனுக்கு கொரோனா: திருமணம் நடத்திய குடும்பத்தினர்களுக்கு ரூ.6.26 லட்சம் அபராதம்

ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த ஒரு திருமணத்தில் மணமகனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாகவும், இதனையடுத்து இந்த திருமணத்திற்கு அளவுக்கு அதிகமான நபர்களை அழைப்பு

தந்தை-மகன் உயிரிழந்த விவகாரம் லாக்-அப் மரணம் கிடையாது: அமைச்சர் கடம்பூர் ராஜூ

சாத்தான்குளத்தில் தந்தை-மகன் உயிரிழந்த விவகாரம் லாக்-அப் மரணம் கிடையாது என்றும், கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட 2 நாட்களுக்கு பின்னரே இருவரும் உயிரிழந்தனர்

கொரோனாவால் இறந்த கணவர், தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்ட மனைவி: திக்கற்று இருக்கும் இரு மகள்கள்

கொரோனா வைரஸால் கணவர் பலியான நிலையில் அவரது மனைவி அந்த அதிர்ச்சியில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்

போலீசுக்கு பயந்து கீழே இருந்த மாஸ்க்கை எடுத்து போட்ட இளைஞர்: குடும்பமே கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் பரபரப்பு

போலீசாரின் கெடுபிடி மற்றும் அபராதம் செலுத்துவதற்கு பயந்து கீழே கிடந்த மாஸ்க்கை எடுத்து முகத்தில் அணிந்த இளைஞரால் அவருக்கு மட்டுமின்றி அவரது குடும்பமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக

பீட்டர்பால் முதல் மனைவி போலீஸ் புகார்: விவாகரத்து பெறாமல் 2வது திருமணமா?

நடிகை வனிதா மற்றும் பீட்டர் பால் திருமணம் நேற்று நடைபெற்ற நிலையில் கோலிவுட் திரையுலகமே இந்த தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில் பீட்டர் பாலுடன் புதிய வாழ்க்கை தொடங்க வனிதா