தி.நகர் பற்றிய சிறப்பு தகவல்கள்

  • IndiaGlitz, [Saturday,August 19 2017]

சென்னையின் முக்கிய பகுதிகளில் ஒன்று தியாகராய நகர் என்று கூறப்படும் தி.நகர். . திராவிட இயக்கத்தில் மூத்த தலைவர்களில் ஒருவராகப் போற்றப்படும் பிட்டி தியாகராயர் அவர்களின் நினைவாக கடந்த 1925ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பகுதிதான் இந்த தியாகராயர் நகர் என்ற தி.நகர். இவரது பெயரில் தியாகராயர் அரங்கம் இன்றும் உள்ளது. வெளியூரில் இருந்து சென்னைக்கு வரும் சுற்றுலா பயணிகள் கடைசியாக ஊர் திரும்பும் முன் பர்சேஸ் செய்யும் இடமாக இருந்து வரும் தி.நகர் குறித்த சில அரிய தகவல்களை தற்போது பார்ப்போம்,

1. 1923-25ஆம் ஆண்டுகளில் தான் தி.நகர் உருவானது.

2. கடந்த 1916ஆம் ஆண்டு இங்கு மிகப்பெரிய ஏரி ஒன்று இருந்தது. தற்போதும் லேக்வியூ சாலை என்று மாம்பலம் பகுதியில் உள்ளதே இதற்கு சான்று.

3.கடந்த 1920ஆம் ஆண்டுகளில் சுப்பிரமணியம் ஐயர் என்பவர் இந்த பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தை சொந்தமாக வைத்திருந்தார்.

4. தி.நகரை விட பழமையான பகுதி மாம்பலம்.

5. கடந்த 1920ஆம் ஆண்டு தி.நகரில் ஒரு கிரவுண்ட் விலை ரூ.500 மட்டுமே.

6. 1923ஆம் ஆண்டு இந்த பகுதியில் ஒரு ஏக்கர் நிலம் ரூ.2000 மட்டுமே.

7. 1933ஆம் ஆண்டு பாண்டிச்சேரியை சேர்ந்த சொக்கலிங்க முதலியார் என்பவர் இந்த பகுதியில் பத்து கடைகளை கட்டி அதற்கு பாண்டி பஜார் என்ற பெயரை வைத்தார். அதுதான் இன்றைய பிசியான பாண்டி பஜாராக வளர்ந்துள்ளது.

8. 1948ஆம் ஆண்டுகளில் இன்றைய பிசியான பகுதியாக இருக்கும் ரெங்கநாதன் தெரு, ஒரு அக்ரஹாரமாக இருந்தது.

9. இரண்டாம் உலகப்போரின் போது ஹோலி ஏஞ்சல் பள்ளியை தற்காலிகமாக தி.நகருக்கு மாற்ற மெட்ராஸ் ஐகோர்ட் உத்தரவிட்டது.

10. கடந்த 1930ஆம் ஆண்டு தி.நகர் சமூக கிளப், 14 கிரவுண்ட் நிலத்தை அரசிடம் இருந்து வெறும் ரூ.2900 ரூபாய்க்கு விலைக்கு வாங்கியது.

More News

பழையென கழிந்தே தீர வேண்டும்: கமல் கூறுவது யாரை?

டுவிட்டரிலும் சரி, பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் சரி கமல் கூறும் ஒவ்வொன்றையும் புரிந்து கொள்ள நீண்ட நேரம் யோசிக்க வேண்டிய நிலை உள்ளது...

குழந்தை பெற்று கொள்ள பயமாக இருக்கின்றது. பிரதமரிடம் பிரபல நடிகை கூறியது ஏன்?

பிரபல தொலைக்காட்சி நடிகை திவ்யங்கா திரிபதி என்பவர் தனது டுவிட்டரில் பிரதமர் மோடியின் டுவிட்டர் அக்கவுண்டை டேக் செய்து, 'நாட்டில் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள், பாலியல் கொடுமைகள் அதிகரித்து வருவதால் எனக்கு பெண் குழந்தைகள் பெற்று கொள்ள பயமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இவரது கருத்து கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய&

பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறியது யார்?

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக டல்லடித்து கொண்டிருந்தாலும் சனி, ஞாயிறு மட்டும் உலக நாயகன் கமல்ஹாசன் வருகை காரணமாக களைகட்டும்.

எனக்கும் லவ் இருக்கு! உளறி கொட்டிய காயத்ரி

பிக்பாஸ் வீட்டில் ஒரு பிரச்சனை என்றால் அதற்கு காரணமாகவோ அல்லது பின்னணியிலோ காயத்ரி இருப்பார் என்பது இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து கொண்டிருப்பவர்களுக்கு தெரியும்.

95% திரையரங்குகளில் 'விவேகம்' ரிலீஸ்! புதிய சாதனை ஏற்படுத்துமா?

தல அஜித், காஜல் அகர்வா, அக்சராஹாசன், விவேக் ஓபராய், கருணாகரன் நடிப்பில் சிவா இயக்கிய 'விவேகம்' திரைப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே உள்ளது